×
 

காதலிக்க மறுத்த 17 வயது சிறுமி... கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய முயன்ற இளைஞன் கைது...!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் காதலை ஏற்க மறுத்த மைனர் சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர்; மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்த சிறுமி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  காஜிப்பேட்டை மண்டலம் ஆஞ்சநேயக்கோட்டலு கிராமத்தைச் சேர்ந்த  ஆவுலா வெங்கடேஷ் (19 ) அவரது உறவினரான இண்டர்மிடியட் படிக்கும் மைனர் சிறுமி கீர்த்தனா ( 16 ) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை கீர்த்தனாவிடம் ஆவுலா வெங்கடேஷ் கூறியபோது அவர் காதலை மறுத்ததோடு அவரது பெற்றோருக்கு தெரிவித்ததார். இதனை கேட்ட கீர்த்தனாவின் பெற்றோர் தங்கள் மகளை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆவுலா வெங்கடேஷின் பெற்றோரிடம்  தெரிவித்தனர்.

இதனால் கீர்த்தனா மீது  பகையை வளர்த்து கொண்ட ஆவுலா வெங்கடேஷ் பெற்றோர் இல்லாமல் கீர்த்தனா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்கு சென்ற ஆவுலா வெங்கடேஷ்   கத்தியால் தாக்க முயன்றார். ​​கீர்த்தனா சத்தமாக அலறினாலும் வெறிபிடித்த வெங்கடேஷ், கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துவிட்டுத்  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும், கீர்த்தனா தந்தை அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தார்.

தன் மகளுக்கு நல்ல கல்வி அளிக்க விரும்பியதாகவும் அதற்குள் எவ்வாறு செய்து விட்டானே என்று கதறி கொண்டே கீர்த்தனைவை    தோளில் சுமந்துகொண்டு காஜிப்பேட்டை மருத்துவமனைக்கு தன் மகளின் உயிரைக் காப்பாற்ற கொண்டு சென்றார். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால்  ஆம்புலன்ஸ் மூலம் கடப்பா அரசு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால்  சென்னூர் அருகே சென்றபோதே ​​வழியிலேயே கீர்த்தனா உயிரிழந்தார்.இதனையடுத்து  கடப்பா  மருத்துவமனைக்குக் பிரேத பரிசோதனைக்கு கீர்த்தனா உடல்  கொண்டு சென்ற போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.

இதையும் படிங்க: #BREAKING: சாத்தான்குளம் வழக்கு... தூக்கு தண்டனையா..? ஏப். 6ல் வெளியாகிறது விபரம்..!!

கீர்த்தனா இறந்த தகவல் அறிந்த அவருடன் படித்த மாணவர்கள் மற்றும்   மாணவர்  சங்கத்தினர் பெற்றோருடன் சாலை மறியலில்  ஈடுப்பட்டனர்.  கொலையைச் செய்த ஆவுலா வெங்கடேஷ்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி,  போராட்டத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் காஜிபேட் போலீசார் உடனடியாகச்   அங்கு வந்து கீர்த்தனாவை கொலை செய்த  வெங்கடேஷைக் கைது செய்துள்ளதாகவும் சட்டப்படி அதிகப்பட்ச தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னர் அவர் கலைந்தனர்.

இதையும் படிங்க: உல்லாச வாழ்க்கை மீது மோகம்... 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொடூரன்... குடும்பத்திற்குள் மறைந்திருந்த குற்றவாளி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share