×
 

சாப்பாடு டெலிவரி ஆப் பெயர் மாறியது..! இனி சோமேட்டோ அல்ல.. 'ஈட்டர்னல்'

இனிமேல் சோமேட்டோ அல்ல.. 'ஈட்டர்னல்'

உணவுகள், மருந்து, மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் சோமேட்டோ நிறுவனம் தன்னுடைய பெயரை அதிகாரபூர்வமாக இன்று முதல் மாற்றிக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சோமேட்டோ நிறுவனம் பங்குச்சந்தையில் தங்களின் நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவித்தது. 

அதன்படி, சோமேட்டோ நிறுவனத்தின் பெயர் “ஈட்டர்னல்” என மாற்றப்பட்டுள்ளது, ஆனால், செயலியில் சோமேட்டோ என்று தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள், மத்திய கார்ப்பரேட் அமைச்சகம், மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் பெற்றபின் முறைப்படி சோமேட்டோ “ஈட்டர்னல்” என மாற்றப்படும்.

மும்பைப் பங்குச்சந்தையில் சோமேட்டோ நிறுவனம் தாக்கல் செய்த பைனலிங்கில் கூறுகையில் “எங்கள் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் 2024, பிப்ரவரி 6ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, நிறுவனத்தின் பெயர் சோமேட்டோ லிமிட்டட் என்பதற்குப் பதிலாக ஈட்டர்னல் லிமிட்டெட் என மாற்றப்படுகிறது, இதற்கு இயக்குநர்கள்குழு ஒப்புதல் அளித்துவிட்டது”எ னத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வட மாநில மதவெறி பருப்பு பெரியார் மண்ணில் வேகாது... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இறங்கி அடித்த கி. வீரமணி.!

சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபேந்திர கோயல் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த கடிதத்தில் “நாங்கள் பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கியபின், அதை ஈட்டர்னல் என மாற்ற முடிவு செய்தோம். பிளிங்கிட் நிறுவனத்தை சோமேட்டை முற்றிலுமாக வாங்கிவிட்டது.  இதையடுத்து, ஈட்டர்னல என பெயரை மாற்றியுள்ளோம். இந்த பெயர் மாற்றத்துக்கு எங்கள் நிறுவன இயக்குநர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி தலையில் இடியை இறக்கிய விஜய்... ஒரே ஒரு கன்டிஷனில் அதிமுக ஆட்டம் குளோஸ்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share