4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துர் ஒன்றியம் நயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தானேஷ் (என்ற)யுவராஜ், 29. இவர், 2018 ஜனவரி 18ல் , அதே பகுதியில் சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்குள் துாக்கச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க: மனநலம் குன்றிய 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது..!
திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.
இன்று நடந்த விசாரணையில், நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றவாளிக்கு பாலியல் தொல்லைக்கு 5 ஆண்டு 5 ஆயிரம் ரூபாய், கடத்தியதற்கு 10 ஆண்டு 10 ஆயிரம், வீட்டில் அடைத்து வைத்து பாலியன் வன்கொடுமை செய்தற்கு 1 ஆண்டு ஆயிரம் ரூபாய், குழந்தை அடித்த மானபங்கம் செய்ததற்கு 7 ஆண்டு 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 23 ஆண்டு 21 ஆயிரம் ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழக அரசு வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றவாளி ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த வழிப்பறி வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ளதால் தீர்ப்பு நகலை போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: அடச்சீ!! பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல்... அரசு பேருந்து நடத்துநர் போக்சோவில் கைது.!
 by
 by
                                    