×
 

புதுச்சேரி அரசியலில் நெக்ஸ்ட் மூவ்.. புதிதாக மூன்று எம்.எல்.ஏக்கள் நியமனம்..!

புதுச்சேரியில் மூன்று புதிய எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.  புதுச்சேரியில் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ஜ., அமைச்சர் சாய்சரவணன் குமார், நியமன எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த 27ம் தேதி ராஜினாமா செய்தனர். இதனால் அந்த இடங்கள் காலியாகின, இதை நிரப்புவதற்காக புதிய நியமனங்கள் செய்யப்பட்டன.

இவர்களுக்கு பதிலாக, பா.ஜ., மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், ராஜசேகர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ., பதவிக்கு, கவர்னர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்பட்டியலை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

இதையும் படிங்க: புதுவை பாஜக மாநிலத் தலைவராகிறார் வி.பி.ராமலிங்கம்.. நாளை பதவியேற்பு..!

ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தும் புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் குறித்த அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவைச் சேர்ந்த செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மற்றும் காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகரன் ஆகியோர் மத்திய அரசால் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் ஜூலை 14ம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு சபாநாயகர் செல்வத்தின் முன்னிலையில் பதவி ஏற்கின்றனர். 

2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது அரசியல் செல்வாக்கை வலுப்படுத்த முயற்சிக்கிறது. புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக செல்வம், தீப்பாய்ந்தான், மற்றும் ராஜசேகரன் ஆகியோரை நியமிப்பதன் மூலம், கட்சி தனது ஆதரவு அடிப்படையை பலப்படுத்தவும், உள்ளூர் தலைமைத்துவத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் தீப்பாய்ந்தான் முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், ராஜசேகரன் காரைக்காலைச் சேர்ந்த பிரபல தொழிலதிபராகவும் உள்ளனர். இவர்களின் உள்ளூர் செல்வாக்கு மற்றும் அரசியல் அனுபவம், பாஜகவின் தேர்தல் உத்திக்கு பயனளிக்கும் என கருதப்படுகிறது.

புதுச்சேரியில் பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட பதற்றங்கள், பாஜகவை தனது பலத்தை தனித்து நிரூபிக்க வைத்திருக்கலாம். இந்த நியமனங்கள், பாஜகவின் தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்துவதற்கு ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள், 2026 தேர்தலை முன்னிட்டு பாஜகவின் அரசியல் உத்திகளை மறுசீரமைப்பதற்கும், கூட்டணி மற்றும் உள்ளூர் அரசியல் சூழலை சமாளிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டவையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள்... ரத்து செய்யப்பட்ட விமானம்... புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share