×
 

#BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

ஓட்டுநர் உட்பட அந்த ஆட்டோவில் மொத்தம் 12 பேர் இருந்தனர். பயணிகளில் 11 பேர் பெண் தொழிலாளர்கள்

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ஐந்து பெண்கள் உட்பட ஆறு கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம், ஜஹீராபாத் மண்டலம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சத்வார் கிராமத்தின் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாலை வேளையில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் 12 பேர்  வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் ராஜகிரி கிராமத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது பலமாக மோதியுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?

இந்த விபத்தின் தாக்கத்தில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியுள்ளது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரில் ஐந்து பேர் பெண்கள், ஒருவர் ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தேவதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிர்மலா, நிகிதா, துல்சம்மா, சந்திரகலா, ராதிகா, ஷில்பா மற்றும் ஷோபா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் முனிப்பள்ளி மண்டலத்திலுள்ள புதேராவிற்குப் பருத்தி களை எடுக்கும் பணிக்காக வந்திருந்து, அன்றைய வேலைகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

மேலும், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஜஹீராபாத் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்களும் காவல் துறையினரும், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளனர்.

இதனிடையே, விபத்து குறித்து அந்தப் பகுதி போலீசார், விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி மற்றும் அதன் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அதிகாலையில் மேம்பாலத்தில் நடந்த கோரம்... ஆம்னி பஸ்ஸுக்குள் சென்ற கார்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் 2 பேர் துடிதுடித்து பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share