முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! ஆ.ராசா மீது பாய்ந்தது வழக்கு! விரைவில் கைது?!
ஆ. ராசாவின் பேச்சு சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. முதல்வர் விஜய் குறித்து அவர் பேசியதாக கூறப்படும் உரையைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆ. ராசா, முன்னாள் தலைவர்களான ராஜாஜி மற்றும் அண்ணா குறித்து குறிப்பிட்டு பேசும் போது, தற்போதைய முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்தது.
இதனைத் தொடர்ந்து, அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ராசா மணிகண்டன், ஆ. ராசாவின் பேச்சு சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையிலான கருத்துகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உடனே போங்க! படகு விபத்தில் சிக்கிய தமிழர்கள்! சேலம் DIG வியட்நாம் செல்ல முதல்வர் விஜய் உத்தரவு!
திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, கே.என். நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆ. ராசா, முன்னாள் தலைவர்கள் அண்ணா மற்றும் ராஜாஜி தொடர்பான சம்பவங்களை எடுத்துக்கூறியதுடன், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தனது கருத்துகளை பதிவு செய்தார்.
மேலும், கூட்டணி அரசியல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் பல்வேறு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன என்றும், கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அதிகாரம் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஆ. ராசாவின் இந்த பேச்சும், அதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ள புகாரும் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!