×
 

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு! மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா…!

கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்து வருகிறோம் என்றும் நெருக்கடியான காலகட்டம் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விஜயின் சுற்றுப்பயணம் மிகப்பெரிய மக்களின் எழுச்சியாக உருவானது என்றும் பல ஊருக்கு செல்லும்போதெல்லாம் இந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு எழுச்சி இருந்ததாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப்பெரிய நம்பிக்கையை, அன்பை விஜயின் வருகைக்கு மக்கள் உருவாக்கினார்கள் என்றும் கூறினார். உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்றும் நாமக்கல் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் ஆதரவோடு 3 - 10 மணிக்கு காவல்துறை சொன்ன இடத்தில்தான் நாங்கள் சென்றோம் என்று கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நுழையும்போது காவல்துறை தான் வரவேற்றார்கள் என்றும் திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேச சொன்னதாகவும் தெரிவித்தார். காவல்துறை கொடுத்த நேரத்திலேயே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும் இந்த சம்பவம் நடந்த பிறகு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கரூர் எல்லையில் காத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

இழப்பு ஏற்பட்டவுடன் முதல் மூன்று முதல் நான்கு நாட்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம் என்றும் எங்கள் உறவுகள் இறந்த பிறகு மௌனமாக இருந்ததாகவும் அந்த நேரம் திமுக நாடகத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தை முடக்கும் முயற்சியில் திமுக செயல்படுவதை தாங்கள் அறிந்ததாகவும், ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அரசு தரப்பு நியாயத்தை மட்டுமே உள்துறைச் செயலாளர் பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, நிவாரணம் வழங்குவதோடு மட்டுமில்லாமல் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உத்தரகாண்டில் ஆதவ் அர்ஜுனா... உண்மை வெளிவரும் என திட்டவட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share