திமுகவுக்கு குல்லா! 210 தொகுதி நம்ப பக்கம் தான்… இபிஎஸ் ஃபயர் ஸ்பீச்!
2026 சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கோவையிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி இன்று நடத்தி வருகிறார்.
தற்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சனை என்ற பேச்சுக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் திமுக கூட்டணியில்தான் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக மக்களின் பிரச்சனையை தீர்க்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கூறியுள்ளதாகவும், திமுக அரசின் குறைகளை எடுத்துரைக்கும் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தை இபிஎஸ் பாராட்டியும் பேசினார். அதிமுகவும் பாஜகவும் இணக்கமாக இல்லை எனக் கூறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யார் என்று கேள்வி எழுப்பினார். கூட்டணி ஆட்சி விவகாரத்தில் உள்ளே ஒன்று வெளியே ஒன்றை வைத்துக்கொண்டு திருமாவளவன் பேசுவதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? மு.க.ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!!
என் டி ஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவிட்டார் என்று கூறிய அவர், மேலும் பல கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத குடும்ப அரசியல் ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், அதிலிருந்து தமிழகத்தை மீட்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என இபிஎஸ் சூளுரைத்துள்ளார். வீட்டு மக்களைப் பற்றியே சிந்திக்கும் கட்சி திமுக நாட்டு மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என தெரிவித்தார்.
50 மாத கால திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த புதிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரவில்லை என்றும் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சிகள் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிசம் வந்துவிடும் என்றும் மதுரையில் கஞ்சா விற்பனை புகார் அளித்தவரை வீடு தேடிச் சென்று அறிவாளால் வெட்டுகின்ற நிலை திமுக ஆட்சியில் உள்ளதாகவும், சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் மாடல் இல்ல.. FAILURE மாடல்! மருத்துவருக்கே பாதுகாப்பு இல்ல.. விளாசிய இபிஎஸ்..!