×
 

”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி”... அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு...!

மு.க. ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி முடிந்து விடும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்ள  நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற  முன்னாள்அமைச் சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- எடப்பாடி பழனிச்சாமியை நம்மை விட அதிகமாக புகழ்ந்தவர்கள் தான் இன்றைய தினம் அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் எல்லாம் மண்ணை கவ்வப்போகிறார்கள். உங்களை வளர்த்த அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சாதாரண தொண்டர் சென்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் அதிமுக கட்சியை வைத்து முழுமையாக பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்துவிட்டு அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்று வேஷம் போடுகிறார்கள். 

மீண்டும் அவர்கள் தாய்க் கழகத்தில் இணையும் காலம் விரைவில் வரும். முன்னாள் அமைச்சர் கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. வினர் த.வெ.க.வில் இணைந்துள்ளதாக க் கூறுவது ஒரு செட்டப். அ.தி.மு.க வின் உண்மைத் தொண்டர்கள் ஒரு நாளும் கட்சி மாற மாட்டார்கள்.

இதையும் படிங்க: விழுப்புரம் அதிமுக மா.செ. கார் மீது கல்வீச்சு..! CV சண்முகம் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு..! அதிமுகவில் பதற்றம்..!!

 மின்மினிப் பூச்சிகள்   சென்றுவிட்டால் அதிமுக கட்சி அழிந்து விடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று சரித்திர சாதனைகளை ச்செய்ய தவெகவிற்குத் தகுதி உள்ளதா?. தவெகவினர்  வேஷம் கட்டி ஆடுகிறார்கள். உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது.விஜய் ஒரு மாஸ் நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். 

தேர்தலின் போது விஜய் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் நம்பி விட்டனர். அதனால் தான் தவெகவுக்கு கிராமங்களில் அதிகளவில் ஓட்டு கிடைத்தது. தவெகவின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள்.

தவெகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.ஆனால் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியிலிருந்து  வெற்றி பெற்ற கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள். 

இந்த ஆட்சியை வைத்துக்கொண்டு கரூரில் இந்த ஆட்டமா?. மேயராக, துணை முதல்வராக,  முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை கொத்து புரோட்டா போடுவோம் என முதல்வர் விஜய் பேசுவது நியாயமா?.  நானும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். அரசியல் ரீதியாக விமர்சனம் செய்துள்ளேன். எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றிப் பேசியதால் பதிலடி கொடுத்துள்ளேன். ஆனால் நான் அவரை அவமானமாகப் பேசியதில்லை. 

மத யானைக்கு நிகரான திமுகவையே அடக்கி ஆண்டவர்கள் நாங்கள். அதிமுகவைப் பார்த்து தூர்ந்து போன சக்தி என கூறுவதா?.  ஆட்களையே பார்க்காமல் வாக்களித்த ஒரே தேர்தல் இந்த தேர்தல்தான்.

இந்து அறநிலையத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் லூசு த்தனமாக உள்ளது என கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எந்த நேரம் மு.க.ஸ்டாலினுக்கு  கோபம் வருகிறதோ? அப்போது த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும். அவருக்கு கோபம் வர வேண்டும், வரும், அதுவரை தவெக ஆட்சி நீடிக்குமா? எனவும் தவெக ஆட்சியை விமர்சித்தார். 

தவெகவுக்கு  வாக்களித்த மக்கள் இன்றைய தினம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  ஒரேநாடு- ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்புள்ளதால் தவெக ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நடைபெறும்.  முதல்வர் பொறுப்பி லுள்ளவர் தார்மீகமாகப் பேச வேண்டும். 

இதற்கு முன்னர் எந்த ஒரு முதல்வரும் விஜய் பேசியதைப் போல் யாரையும் வசைபாடியதில்லை. தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும்.ஒரு முதல்வரே இப்படி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதையே  காட்டுகிறது. தவெக தலைவர்  விஜய்யின் பேச்சை யாரும் ரசிக்கவில்லை. என்றார்.

இதையும் படிங்க: கடை தேங்காய் எடுத்துப் பிள்ளையாருக்கு உடைச்ச கதை..! சினிமா ஷூட்டிங் போல இருக்கு... முதல்வர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share