×
 

உல்லாச பயணம் போகும் உனக்கு இது தேவையா?... உதயநிதியை வெளுத்து வாங்கிய இபிஎஸ்...!

உதயநிதி எப்படி பதவிக்கு வந்தார்? கருணநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பது தவிர என்ன உழைப்பு இருக்கிறது? இவர் பேசுகிறார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிராசரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மொடக்குறிச்சி தொகுதியை தொடர்ந்து , ஈரோடு கிழக்கு  தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டியில் திறந்தவெளி மைதானத்தில்  பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். . 

அப்போது உதயநிதி ஸ்டாலின் குறித்து சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக கட்சி அலுவலகம் அமித் ஷா வீட்டில் இயங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி துறையூரில் பேசியிருக்கிறார். உதயநிதி அவர்களே, உங்களுக்குக் கண் தெரியவில்லை என்றால் கண்ணாடி வாங்கித்தருகிறேன். ராயப்பேட்டையில் தான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. நீங்களும் உங்க அப்பாவும் திட்டம் போட்டீர்கள். அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்குவதற்குத் திட்டம் போட்டீர்கள். சில பேர் தூண்டுதலின்பேரில் அடித்து நொறுக்கினார்கள். அதை சாக்காக வைத்து அலுவலகத்துக்கு சீல் வைத்தீர்கள். ஆனால், அந்த சீலை அதிமுக உடைத்தெறிந்தது. 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருணாநிதி காலத்தில் திமுக இரண்டாக உடைந்தது, கருணாநிதி ஒருபக்கம், வைகோ ஒருபக்கம். அப்போது அந்த கட்சியை கைப்பற்ற முயற்சித்தனர், அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்த கட்சி அதிமுக கட்சி, மறந்துவிடாதீர்கள், உங்களைப்போல எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணம் இல்லை, சக்கரம் சுழல்கிறது, கீழே உள்ள சக்கரம் மேலே வரும். அதிமுக ஆட்சி வந்ததும் பதிலடி கொடுப்போம்.

இதையும் படிங்க: தாத்தா, அப்பா அட்ரஸ் மூலம் வளர்ந்த நீ வாய் பேசுறீயா? - உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

உதயநிதி எப்படி பதவிக்கு வந்தார்? கருணநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பது தவிர என்ன உழைப்பு இருக்கிறது? இவர் பேசுகிறார். பால்டாயில் எல்லாம் பேசுகிறது.
கரூரில் 41 உயிர்களை இழந்துவிட்டோம். முதல்வர் இரவே வந்து பார்த்தார், சரி. உதயநிதி சுற்றுலாவில் இருந்து கரூர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா சென்றவர் இதுகுறித்து பேசலாமா? நாட்டை ஆளும் முதல்வர், துணை முதல்வர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? இதை விட்டுவிட்டு உல்லாசப் பயணம் போகும் உங்களுக்கு எங்களைப் பற்றி பேச அருகதை, யோக்கியதை இல்லை. 

எங்கள் ஆட்சியைப் பற்றி பேசுவது என்றால் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி பற்றி பேசுங்கள். அந்த ஆட்சியில் குறை சொன்னால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். எப்போது பார்த்தாலும் பாஜகவின் அடிமை என்று கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி பேசுகிறார். உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பே இல்லை, அப்படி தெரிந்திருந்தால் இப்படி பேசமாட்டார். 

இதே திமுக 1999, 2001 ஆகிய தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போது பாஜக நல்ல கட்சி, நாங்கள் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியா? ஆட்சி அதிகாரம் என்றால் யார் காலையும் பிடிக்கும் அடிமை திமுக. 
எமர்ஜென்ஸி, மிசா என்றெல்லாம் ஸ்டாலின் பேசுகிறார். அவை எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் வந்தது. ஸ்டாலினே மிசாவில் கைது செய்யப்பட்டார், அப்படிப்பட்ட கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள், நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன தப்பு?.

இதைவிடக் கொடுமையான சம்பவம், மரியாதைக்குரிய இந்திரா காந்தி அவர்கள் மதுரையில் கார் பயணத்தில் தாக்கப்பட்டு ரத்தம் வந்தபோது, உங்கள் அப்பா என்ன சொன்னார் என்று ரோஷமுள்ள காங்கிரஸ்காரர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். என்ன பேசினார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி. 
அதிமுகவைப் பொறுத்தவரை கொள்கைதான் பிரதானம், கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு அமைக்கப்படுவது. திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்தில் ஒன்றிணைந்திருக்கிறோம். இதில் என்ன தவறு? இதற்குத்தான் திமுக கூட்டணி எல்லாம் பதறுகிறது.

அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைப்போம்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஸ்டாலின் கருப்பு பலூன் விடுவார், ஆட்சிக்கு வந்தபின்னர் வெள்ளை குடை பிடிப்பார், வெள்ளைக் குடை வேந்தர் ஸ்டாலின் இப்படி நடிக்கலாமா? காலத்துக்கேற்றவாறு நடிக்கும் தலைவர் ஸ்டாலின். பச்சோந்தியை விட மோசமாக அவ்வப்போது நிறம் மாறி கூட்டணி வைக்கும் கட்சி திமுக எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அதிமுகவுக்கு ரூட்டை கிளியர் செய்து விட்ட உதயநிதி... செம்ம குஷியில் எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share