“டி.கே.சிவக்குமாரை பாருங்க... அந்த மாதிரி பண்ணுங்க...” - விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி ராமதாஸ்...!
காவேரி பிரச்சனை அனைத்து கட்சி கூட்டத்தின் மூலம் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , எம்.எல்.ஏவும் மனைவியுமான செளமியா அன்புமணி ஆகியோர் தங்கள் திருமண நாளை ஒட்டி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழஙகி வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள தவெக அரசு குறித்து பேசுகையில் 100 நாள் என்பது எந்த ஒரு அரசு பற்றியும் எதுவும் சொல்ல முடியாது. ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆனால் மட்டுமே அரசின் நிலைத்தன்மை குறித்து கூற முடியும். இருப்பினும் ஊழல் தற்பொழுது குறைந்துள்ளது, புதிய மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படுகிறார்கள்.
இருப்பினும் நிதி பற்றாக்குறை உள்ளது பல திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்ட விவாதத்தின் போது சட்டமன்றத்தில் தங்கள் அரசு விவசாயிகளுக்கான அரசு என கூறியுள்ளனர். அது போன்று விவசாய பயிர் கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!
பல மாநிலங்களில் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. காவேரியில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில முதல்வர் டி கே சிவகுமார் மூன்று முறை அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி நான்கு முறை டெல்லி சென்று அழுத்தம் கொடுத்தள்ளார். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இனியாவது அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு என சட்ட அழுத்தம் ஒருபுறம் இருக்க அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளைக் கொண்டு கர்நாடக அரசின் மீது வழக்கு தொடர வேண்டும். கடந்த ஆண்டு குருவை சாகுபடி ஆறரை லட்சம் ஏக்கர் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அவ்வளவுதான் பயிரிடம் முடிந்துள்ளது செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீரை திறக்க முதல்வர் செல்ல இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இது சம்பா சாகுபடிக்கு மட்டுமே சரி போகும் குருவை சாகுபடி இழப்பை கருத்தில் கொண்டு வழக்கு தொடர வேண்டும். எனவே இந்த ஆண்டு மட்டும் அல்லாமல் இனி வரக்கூடிய ஆண்டுகளிலும் இதே நிலைதான் கர்நாடக அரசு இருக்கும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்கள் நீர் பங்கீடு சரியான முறையில் செய்வதற்கான தீர்ப்பு கிடைக்கும்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் சட்டப்பேரவையில் நல்ல ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும். ஆனால் தனி நபர் விமர்சனம் அதிக அளவில் உள்ளது. அதனை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பிரச்சினைகள் பல உள்ளது குறிப்பாக கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளது. அது குறித்து பேச வேண்டும் அதை விட்டு அப்பாவை காணவில்லை, மாமனாரை காணவில்லை என்று வீண் விவாதம் செய்யக்கூடாது.
எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் சரியான முறையில் உரிய முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை வரவேற்கிறேன். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டால் அப்பொழுது உள்ள சூழ்நிலை பொருத்து முடிவெடுக்கப்படும் இப்பொழுது அது போன்ற சூழல் இல்லை என என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செப்.17 CM விஜய் விருதுநகர் விசிட்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. வேகம் காட்டும் பெண் அமைச்சர்கள்!!