×
 

" தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

தாமரை சின்னம் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாமல் அண்ணாமலையின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வு, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்தான். அண்ணாமலையின் பிறந்தநாள் ஜூன் 4-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில பாஜக நிர்வாகிகள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் அல்லது பாஜகவின் தாமரை சின்னம் இடம்பெறாதது குறிப்பிடத்தக்க வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது. சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் “எங்கள் தலைவா... தலைமை ஏற்க வா”, “வையத் தலைமைகொள்!”, “தலைவா தரணி ஆளவா” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அண்ணாமலையின் பிரம்மாண்டமான படங்கள் மட்டுமே மைய இடத்தில் இருக்கின்றன. இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் அல்லது பாஜகவின் அடையாளமான தாமரை சின்னம் இல்லாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாஜக தொடர்பான பிரசாரப் பொருட்களில் மத்திய தலைமை மற்றும் கட்சி சின்னம் இடம்பெறும் நிலையில், இந்த போஸ்டர்கள் தனிப்பட்ட அண்ணாமலை ஆதரவை மட்டுமே வலியுறுத்துவதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

இது கட்சிக்குள் உள்ள உள் நடவடிக்கைகள், தலைமை மாற்றம் மற்றும் அண்ணாமலையின் எதிர்கால அரசியல் பாதை குறித்த ஊகங்களை அதிகரித்துள்ளது. அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவலாக பேசப்படும் நிலையில் இது போன்ற போஸ்டர்கள் சர்ச்சையை மேலும் அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share