×
 

பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

பெண்கள் தொடர்பான இழிவான பதிவு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆ. ராசா புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்ததை விமர்சித்து அவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

இந்தப் பதிவு பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசமான மொழியைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பதிவு வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. விசிக் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவாளர்கள், பெண் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் பதிவை கடுமையாகக் கண்டித்தனர்.

பெண்களின் கண்ணியத்தைப் புண்படுத்தும் வகையில் இருந்ததால், இது விரைவில் வைரலானது. எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதை "பெண் விரோத" நடவடிக்கை என்று முத்திரை குத்தினர். அழுத்தம் அதிகரித்ததால், ஆ.ராசா அந்தப் பதிவை அவசரமாக டெலீட் செய்தார்.

இதையும் படிங்க: என் வீட்டு தென்னை கூனி எதிர்வீட்டுக்கு இளநீர் தந்தால் பெயர் என்ன..? ஆ.ராசா வார்த்தைப் போர்..!

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, செய்தியாளர்கள் ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்க முயன்றனர். ஆனால், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வேகமாக நடந்து சென்று தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்தக் காட்சி வீடியோவாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியது. இது அவரது பதிவுக்கு அவர் பொறுப்பேற்காமல் தவிர்க்கும் மனநிலையை பிரதிபலிப்பதாகப் பார்க்கப்பட்டது. செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆ ராசா தலை தெறித்து ஓடி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதையும் படிங்க: அமைதியா போறது.. அநாகரீகம் தவிர்க்க தான்..! ஆ. ராசாவை பூந்து விளாசிய S.S. பாலாஜி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share