×
 

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு?! வெளியே சொன்னா எனக்குத்தான் பிரச்னை! பாஜ எம்.பி பகீர்!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை வசூலில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடப்பதாக சமீபத்தில் மஹிபால் சிங் புகார் தெரிவித்திருந்தார்.

அயோத்தி: ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவில் நன்கொடை வசூலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என அறக்கட்டளை தரப்பில் இருந்தே கோரிக்கை எழுந்துள்ளது.

கோவில் கணக்கு பொறுப்பாளராக இருந்த மஹிபால் சிங், நன்கொடை வசூலில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடப்பதாக சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதே குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “அயோத்தி கோவில் நன்கொடை விவகாரத்தில் பாஜக மவுனம் சாதிக்கிறது” என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸின் வாரிசான மஹந்த் கமல் நயன் தாஸ் நேற்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமின்றி, நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: யார் அந்த சார்?... உளறல் நிதி பதில் சொல்லத் தயாரா?... உதயநிதியை வம்பிழுத்த தவெக ஐ.டி.விங்க்...!

முன்னாள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் இந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். “நன்கொடையில் முறைகேடு நடந்தது தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால், உண்மைகளை வெளியே சொன்னால் எனக்கே பிரச்னை வரும். இதில் தொடர்புடையவர்கள் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள். எனவே தற்போது உண்மையைச் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. சமயம் வரும்போது உண்மைகளைப் பேசுவேன்” என்றார்.

அயோத்தி ராமர் கோவில் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் நம்பிக்கைக்குரிய தலமாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை அளித்துள்ள நிலையில், முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கி, உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோவில் தொடர்பான எந்தவித முறைகேடும் கடுமையாக கையாளப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்! கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இன்று வழிபாடு! சிறப்பு பூஜை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share