திமுகவின் XEROX தவெகவா.? வலுக்கும் எதிர்ப்பு..! தமிழக பாஜக விளாசல்..!!
தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கூறிய திருப்பரங்குன்றம் தீபத்தோடு தொடர்பான கருத்துக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்து ஆன்மிக மரபுகளை தவெக அரசு முடக்குவதாக தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. தி.மு.க-வின் நகலாகச் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும்" என்று கூறி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அங்கு தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் வகையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருக்கும் கருத்து வன்மையான கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அரசியல் பாதை பேசுவதாகக் கூறி ஆட்சியமைத்த தவெக அரசு, தி.மு.க-வைப் போலவே இந்து விரோதப் பாதையில் பயணிக்கிறது என்றும் கூறியுள்ளது.
நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றி பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், "இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலை நீடிக்கும்" எனப் பிடிவாதம் பிடிப்பதன் மூலம் நீதிமன்றத்தின் மாண்பையும், அதன் உத்தரவின் நோக்கத்தையும் தவெக அரசு திட்டமிட்டே அவமதிக்கிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!
திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவது லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உரிமை ஆகும். எனவே, தவெக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு பாரம்பரிய முறைப்படி உடனடியாகத் தீபத்தூணில் தீபம் ஏற்ற வழிவகை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், பக்தர்களின் வழிபாட்டு உரிமையைக் காக்கப் பாரதிய ஜனதா கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!