×
 

இது புதுசா இருக்குண்ணே... “வடிவேலு பேச பேச திமுக அழிஞ்சி போகும்...” - அறிவாலயத்திற்கு சாபம் விட்ட அண்ணாமலை...!

வடிவேல் பேச பேச திமுக அழிந்து போகும்.என்னுடைய தொகுதியில் கடந்த தேர்தல் என்னுடைய தொகுதியில் வடிவேல் பேசும் போது கட்டுக்கு அடங்காத கூட்டம் ஆனால் திமுக தோற்றது. 

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விளாத்திகுளத்தில் 17 வயது மாணவியின் கொடூரமான நிகழ்வுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. உடனடியாக புகார் எடுத்திருந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.உள்துறை செயலர் செய்தியாளர்கள் சந்திப்பில் இடைநீக்கம் செய்யப்பட்டதை கூறுகிறார்கள். அடிமை கூட்டணியை எதிர்க்கிறேன், எரிவாயு இல்லை என்பதால் பிறந்த நாள் கொண்டாடவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். வேண்டுமென்றே தமிழகத்தில் பெட்ரோல், எரிவாயு தட்டுபாடு போல உருவாக்குகின்றனர். வேறு மாநிலங்கள் யாரும் இப்படி பெட்ரோல், டீசல் வாங்க இப்படி செல்லவில்லை.

நாடாளுமன்றத்தில் தேவையற்ற பிரச்சனையை ராகுல் கிளப்புகிறார். நாடாளுமன்ற மான்பை கெடுத்துள்ளனர் பாஜக அதனை கண்டிக்கிறது. சமையல் எரிவாயு எந்த பிரச்சனையும் இல்லை, தொழில்துறைக்கு 80 சதவீதம் எரிவாயு செல்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக மக்கள் பீதியாக வேண்டாம். இயற்கை எரிவாயு பிரச்சனை இல்லை.  திமுக காங்கிரஸ் பீதியை கிளப்ப வேண்டாம்.

சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை, சில ஹோட்டல்  உரிமையாளர் ஜிஎஸ்டி கணக்கு காட்டாமல் மோசடி  செய்து உள்ளனர். தமிழ்நாட்டில் 400 கோடி மேல் மோசடி செய்ததாக தகவல். அதனால் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக பத்திரிக்கையில் தகவல் வந்துள்ளது. இதுவரை கட்சியில் இருந்து என்னை தேர்தலில் நிற்க கூறவில்லை.  கட்சி முடிவு எடுக்கட்டும், அதனை செய்வேன். நானாக வேண்டும் என கேட்கும் நிலையை கடந்து விட்டேன். நான் ஏதும் கேட்க மாட்டேன். தேவைக்கு அதிகமாக கொடுத்துவிட்டார். கொங்கு மண்டலத்தில் இருந்து பாஜக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: முதல்வர் வீட்டிலிருந்து பத்து நிமிஷம் தான்..!! காரில் கடத்தி மாணவி வன்கொடுமை... கொந்தளித்த அண்ணாமலை..!!

அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும். நலத்திட்ட அரசியலை தாண்டி, அடிப்படை தேவையை மக்கள் விரும்புகிறார்கள். தவெகவும் நலத்திட்ட அரசியலில் உள்ளது. நாம் தமிழர் மட்டுமே நலத்திட்ட அரசியலில் இல்லை. ஜனநாயகன் படம்  குறித்து விஜய்யே எந்த  கருத்து சொல்லவில்லை நாங்கள் என்ன சொல்வது, ஒருவருக்கு சிபிஐ மீது வழக்கு இருந்தால் நாங்கள் என்ன செய்வது. விசாரணை கேட்டது தவெக தான் நாங்களும் ஆதரவு கொடுத்தோம். எத்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆனால் எங்கும் பேசவில்லை.

எடப்பாடிக்கு சுக்கர திசை அடிக்கிறது.அவர் தான் முதல்வர்.கமலஹாசன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.இந்த ஆட்சி தொடர்ந்தா போதையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது.  எங்கள் கட்சி கூட்டணி பலமாக உள்ளது.ஆட்சி முறையை வைத்து தான் ஒட்டு போடுவார்கள். நல்லது செய்தால் ஒட்டு போடுவார்கள்.நல்லது செய்திருந்தால் இவ்வளவு விளம்பரம் தேவையில்லை.

செந்தில் பாலாஜியை சிபிஐ அழைக்க வேண்டும். 10 ரூபாய் பாலாஜி என்ற போது நெருப்பு வீசப்பட்டது. கூட்டம் நடந்த போது அவர் அங்கு இருந்தார். விஜய் வேறு சித்தாந்த்தை அறிவித்துள்ளனர் . ஆனாலும் வேறு வேறு கொள்ளை இருந்தாலும் எதிரியை வீழ்த்த கூட்டணி அமைகிறது. மாநில தலைவராக இருந்த போது கட்சியை வளர்க்க வேண்டும் என பணியாற்றினேன். இப்போது கட்சியின் தொண்டராக வெற்றிக்கு உழைக்கிறேன். எடப்பாடி மீது வைத்த விமர்சனம் காலத்தின் கட்டாயம், அவரும் விமர்சித்தார். அரசியலில் அதனை திரும்பி பார்க்க கூடாது.  விமர்சனம் கட்சியின் வளர்ச்சிக்காக வைக்க வேண்டியுள்ளது எனக்கூறினார். 

வடிவேல் பேச பேச திமுக அழிந்து போகும்.என்னுடைய தொகுதியில் கடந்த தேர்தல் என்னுடைய தொகுதியில் வடிவேல் பேசும் போது கட்டுக்கு அடங்காத கூட்டம் ஆனால் திமுக தோற்றது. 

இதையும் படிங்க: திமுக தலைவர்கள் மட்டும் கோவமா தான் தட்டி கொடுப்பாங்களோ? அமைச்சர் சேகர்பாபுவை விளாசிய அண்ணாமலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share