திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!
அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன.
இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க: டிக் டிக் டிக்...! விழுப்புரம், பெரம்பலூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை..!!
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் வருவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
இதையும் படிங்க: அமைச்சர் நேரு மீதான முறைகேடு விவகாரம்... அரசு அனுமதிக்கு வெயிட் பண்ணனுமா? லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்..!!