×
 

டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக காந்தி ஸ்மிருதி செல்ல முயன்ற ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்களின் பேருந்து டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்துப் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி தலைமையில் காந்தி ஸ்மிருதி (காந்தியடிகளின் நினைவிடம்) நோக்கிப் புறப்பட்ட இந்தியா கூட்டணி எம்பிக்களின் பேருந்தை டெல்லி காவல்துறை நடுவழியில் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கல்வித் துறை முறைகேடுகளைக் கண்டித்துக் காந்தியடிகள் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

காங்கிரஸின் ராகுல் காந்தி, ப. சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் காந்தி ஸ்மிருதியை நோக்கிச் சென்றனர். முதலில் இந்தியா கேட் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி ஸ்மிருதிக்குச் செல்ல முயன்றபோதிலும், எம்பிக்கள் சென்ற பேருந்தைக் காவல்துறையினர் வழியிலேயே மறித்துத் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்தவரே பிரதமர் மோடி தான்..!! ராகுல் காந்தி விளாசல்..!!

பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல நாட்களாக வீதியில் இறங்கிச் போராடி வருகிறார்கள். மாணவர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இந்த அரசைக் கண்டித்து, மாணவர்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி எம்பிக்களாகிய நாங்களும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

காவல்துறையின் இந்தத் தடுப்பு நடவடிக்கையைக் கண்டித்து எம்பிக்கள் அங்கேயே திரண்டு முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share