×
 

பெங்களூருவில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? விரைந்தது தனிப்படை...!

தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் ஆனந்த் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் விரைந்தனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 110 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய நகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இன்று இருவரது மனுவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: டெல்லி பறக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா.. சம்மன் அனுப்பிய போலீஸ்.. என்னதான் நடக்குது..??

இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை தங்களை கைது செய்யலாம் என்பதால் இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புஸ்சி ஆனந்த் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூர் தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மானக்கேடு... போலீஸ்காரர்களே பெண்ணை சீரழித்த கொடூரம்... சீமான் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share