விஜய் டிரைவரிடம் விசாரணை!! பிரசார வாகனத்தில் சோதனை!! இறுக்குப்பிடிக்கும் சிபிஐ அதிகாரிகள்!! தப்புமா தவெக!
தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் 41 பேர் (அதில் 9 குழந்தைகள் உட்பட) உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் நவம்பர் 25-ம் தேதி டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி பதில் அளித்தனர்.
அதேபோல் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகினர். டிசம்பர் 4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு சிபிஐ முன் ஆஜராகி 2 மணி நேரத்துக்கும் மேலாக விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: கரூர் கொடுந்துயரம்!! விஜயிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்!! டெல்லியில் இருந்து பறக்கும் சம்மன்!
இந்நிலையில், வழக்கின் அடுத்த கட்டமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 12-ம் தேதி (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று (ஜனவரி 10) சிபிஐ அதிகாரிகள் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். பனையூரில் இருந்து கரூருக்கு கொண்டு சென்று வாகனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். வாகன டிரைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த விசாரணை த.வெ.க.வுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் இருந்து வந்த ஓலை! சிபிஐ வளையத்தில் விஜய்!! 11ம் தேதியே தலைநகருக்கு பயணம்!