×
 

முதலீட்டாளர்களுடன் சந்திப்பு.. இன்றிரவு லண்டன் நோக்கி புறப்படும் விஜய்..!! தமிழக முதல்வராக முதல் பயணம்!!

தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதே இலக்கு.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 10) இரவு அதிகாரப்பூர்வ பயணமாக லண்டன் நோக்கிப் புறப்படுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் தொழில்களை விரிவுபடுத்தி முதலீடுகளை ஈர்ப்பதாகும்.

சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு 10 மணியளவில் பயணிகள் விமானத்தில் துபாய் செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து வேறு விமானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) லண்டன் வந்து சேர்கிறார். லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ள அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடி ஆலோசனை நடத்துவார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்து, மாநிலத்தின் தொழில் சாத்தியங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் விளக்குவார்.

இந்தப் பயணம் செப்டம்பர் 16 இரவு முடிவடைகிறது. துபாய் வழியாகச் சென்னைக்கு செப்டம்பர் 17 அன்று முதலமைச்சர் திரும்புகிறார். தமிழ்நாட்டை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதே அரசின் இலக்கு என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி முதலீடுகளை ஈர்ப்பது இப்பயணத்தின் மையப் பகுதியாக உள்ளது.

இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை: ஜேசிபி, படகுகளை தயார் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் வெற்றி முதலீட்டு மாநாடு நடத்தப்பட்டது. அதில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் லண்டன் பயணம் அமைந்துள்ளது. 

முதலமைச்சர் விஜய் முதலீட்டாளர்களுடன் நேரடியாகப் பேசி, தமிழ்நாட்டின் தொழில் சூழல், திறன்மிக்க மனிதவளம், துறைமுகங்கள் மற்றும் சாலை வசதிகள் குறித்து விரிவாக விளக்கவுள்ளார். இந்தப் பயணம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று, தொழில் வளர்ச்சியை முடுக்கிவிடும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share