×
 

சர்ச்சையான முதலமைச்சர் அலுவலக டெண்டர்... 3 டெண்டரையும் தட்டித்தூக்கிய ஒரே நிறுவனம்...!

முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலகப் பணிகளுக்கான டெண்டர் – குறைந்த தொகையை கோரிய ஒரே நிறுவனம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 5 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோரப்பட்டது.

அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளமானது பிளாக் 1, பிளாக் 2, பிளாக் 3 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று தனித்தனி டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூன்று டெண்டர்களுக்கும் ஒரே நிறுவனமே குறைவான தொகையை குறிப்பிட்டு டெண்டர் கோரியுள்ளது. எனவே, டெண்டர் விதிமுறைகளின்படி அந்த நிறுவனத்திற்கே விரைவில் பணியாணை வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: "அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்"... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து மூலம் சி.எம். விஜய் கொடுத்த மெசெஜ்...!

அதன்படி பார்த்தோம் என்றால், மூன்று டெண்டர்களுக்கும் சேர்த்து பொதுப்பணித்துறை சார்பில் மொத்தம் 5.54 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராசி பில்டர்ஸ் நிறுவனம் மொத்தமாக 3.78 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியுள்ளது.

அதன்படி, பிளாக் 1-க்கு 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு 1.66 கோடி ரூபாயும், பிளாக் 2-க்கு 2.01 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு 1.37 கோடி ரூபாயும், பிளாக் 3-க்கு 1.12 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு 74.94 லட்சம் ரூபாயும் அந்த நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

இதன் மூலம் பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்த தொகையைவிட சுமார் 32 சதவீதம் குறைவான தொகையை ராசி பில்டர்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.

இதையடுத்து, இன்னும் இரண்டு நாட்களில் அந்த நிறுவனத்திற்கு பணியாணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியாணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முதலமைச்சரின் புதிய அலுவலகத்திற்கான பணிகள் அனைத்தும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் விஜய் தனது புதிய அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: போராட இடம் ஒதுக்குவது பெருமையா..? தூய்மை தேவதைகள்... புகழ்ந்தால் போதுமா CM.. TTV தினகரன் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share