“எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல... இவங்க கூட செம்ம கூத்தா இருக்கு...” - திமுகவை பங்கமாய் கலாய்த்த விஜய்...!
எங்கப்பா பீரோக்குள்ள இல்ல, எங்கப்பா பீரோக்குள்ள இல்ல அப்படின்னு சொல்ற மாதிரி! ஐயோ, ஏன் கேக்குறீங்க, இவங்களோட செம்ம கூத்தா இருக்குங்க, செம்ம ஃபன்னா இருக்கு.
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் பார்ட்டி ஃபண்ட் பற்றி பேசியதை கலகலப்பாக மக்களிடம் எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது: நம்ம மக்கள் அமைச்சுக்கொடுத்த நம்ம அரசை, குறைகள் மட்டும் டிசைன் டிசைனா, மாடல் மாடலா குறைகள் மட்டும் சொல்லுவாங்க. ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும், அந்த பார்ட்டி ஃபண்ட்... அந்த கட்சி நிதின்ற பேர்ல அடிக்கிற கொள்ளையெல்லாம் இந்த தீய சக்தியா இருக்கட்டும், தீந்து போன சக்தியா இருக்கட்டும், ரெண்டு பேரும் மாறி மாறி இதையேதான் செஞ்சுட்டு இருக்காங்க.
இதுல ஒரு ஹைலைட் காமெடி என்னன்னா, சட்டசபையில பேசும்போது "பார்ட்டி ஃபண்ட்"னு தான் சொன்னேன். அது எந்த பார்ட்டி, என்ன ஃபண்ட், யாரு, என்ன, பேரு... எதுவுமே சொல்லல. "பார்ட்டி ஃபண்ட்"னு சொன்ன உடனே எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்!
எனக்கே ஃபர்ஸ்ட் புரியல, "ஏன்பா ஓடுறாங்க, அப்படி என்ன நம்ம சொல்லிட்டோம்?" அதான், அந்த குற்றமுள்ள நெஞ்சுக்குத்தான் குறுகுறுங்கும். இது எப்படி இருக்கு தெரியுமா? "எங்கப்பா பீரோக்குள்ள இல்ல, எங்கப்பா பீரோக்குள்ள இல்ல" அப்படின்னு சொல்ற மாதிரி! ஐயோ, ஏன் கேக்குறீங்க, இவங்களோட செம்ம கூத்தா இருக்குங்க, செம்ம ஃபன்னா இருக்கு.
இதையும் படிங்க: திமுகவை வச்சி வெளுத்து விடுங்க... மக்களுக்கு படு ஓபனாக Freedom கொடுத்த சி.எம்.விஜய்...!
சென்னையில ஒரு பாலம் கட்டுறதுக்காக, நார்மலா ஆகுற செலவைவிட அதிக செலவுல, கிட்டத்தட்ட டபுள் மடங்கு செலவுல ஒரு டெண்டர் ஒன்னு விட்டுருக்காங்க. அதையெல்லாம் தோண்டி எடுத்து, அதையெல்லாம் இப்போ கண்டுபிடிச்சு, கேன்சல் பண்ணிருக்காங்க. இன்னும் எத்தனை கோடி ஊழல், எத்தனை லட்சம் கோடி ஊழல் தோண்டத் தோண்ட வருமோ... எங்களுக்கே தெரியல. ஒவ்வொரு முகமூடியா கிழியுது!
ஐயோ, "இந்த விஜய் ஒவ்வொரு தலையா எடுத்து வெளியில விட்டுருவான் போலயே"ன்னு திரும்புற பக்கமெல்லாம் கதறல், கதறல், கதறல், காதுல இருந்து இரத்தம் வராத குறை! ஆமா, இப்படி ஊழல்லயே ஊறிப்போனவங்க இப்படித்தான் இருப்பாங்க.
அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் இந்த 50, 55 நாட்கள்ல நாங்க செஞ்ச சில விஷயங்களை சட்டசபையிலேயே எடுத்துச் சொன்னேன். பட், இங்க ஒரு சில விஷயங்கள் சொல்லணும்னு நினைக்கிறேன். இந்த மின்சாரத் துறையில இதுக்கு முன்னாடி போட முடியாம இருந்த அந்த பதவி உயர்வை வந்து, இப்பதான் எங்களால போட முடிஞ்சது. அதுக்காக ஒரு அக்கா அழுதுகிட்டே ஒரு நன்றி சொன்னாங்களே, அதெல்லாம் அவங்க கண்ணுல படாது, அந்த வீடியோ எல்லாம்... குறை சொல்றவங்களுக்கு!
அடுத்து, "லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் பிளட்லயே ஊறிப்போய் இருக்கு" அப்படின்னு சொன்னவங்க, போய் ஒவ்வொரு கவர்மெண்ட் ஆபீஸா பாருங்க, ஒரு பைசா லஞ்சம் இல்ல, ஒரு பைசா ஊழல் இல்ல! வேலை எல்லாம் சும்மா டக்கு டக்கு டக்கு டக்குன்னு நாங்க நடக்குது.
ஒரு பெரியவர் ஒருத்தர் சொல்றாரு, "தம்பி, வேலை எல்லாம் நடக்குது, ஆனா அதையும் தாண்டி எங்களுக்கு மரியாதை கொடுக்குறாங்க தம்பி, உட்கார வச்சு எல்லாம் பேசுறாங்க!" இதெல்லாம் இதுக்கு முன்னாடி நடந்ததே இல்ல. "அவனைப்போய் பாரு, இவனைப்போய் பாரு, இந்த ஆபீசரை போய் பாரு"ன்னு சொல்லி அலைய விடுவாங்க. இப்ப லஞ்சம் இல்ல, ஊழல் இல்ல, வேலை எல்லாம் உடனே உடனே நடக்குது, மக்கள் அப்படி ஒரு பெருமூச்சு ஒன்னு விடுறாங்க! அதைப் பார்த்து நமக்கு அப்படி ஒரு ஹாப்பினஸ்! இதுக்கு மேல என்ன வேணும்? ஏன் இதெல்லாம் பண்ண முடியாது? மனசுன்னு ஒன்னு இருந்தா பண்ணலாம், இப்ப பண்ணல? எனக்கூறினார்.
இதையும் படிங்க: “விஜய் சார் வந்தும் இப்படி நடக்கணுமா...” - அரசு வேலை வழங்குவதில் மோசடி?... கரூர் சம்பவத்தில் மகனை இழந்த தாய் கண்ணீர் மல்க புகார்...!