×
 
☰

தாராபுரம் அரசியல் களம்..! தவெகவில் இணைந்த Ex.அமைச்சர் செம்மலை... கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற முதல்வர்..!!

தாராபுரத்தின் பிரச்சார நிகழ்வின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். செம்மலை அக்கட்சியில் இணைந்தார். இந்த இணைப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவரான செம்மலை அதிமுகவிலிருந்து விலகிய சில மாதங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.செம்மலை எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இயங்கியவர்.

ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2001ஆம் ஆண்டு அமைச்சராகப் பதவி வகித்தார். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்க தலைவர் இவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்த பிறகு கட்சியில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது.

இந்தச் சூழலில் செம்மலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இருக்க முடியாதென்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பிறகு செயலில் இருந்து விலகி இருந்த அவர் இப்போது மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.தாராபுரத்தில் நடைபெற்ற கூட்ட மேடைக்கு செம்மலை வந்தபோது ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

இதையும் படிங்க: "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அவர் கட்சியில் இணைக்கப்பட்டார். இந்த நிகழ்வு தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது.அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து இணைந்து வரும் போக்கில் செம்மலையின் இணைப்பும் ஒரு முக்கியமான அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share