×
 

“என் மகளை மாதிரியே இருக்கம்மா” - ஆம்னி பேருந்தில் மயக்க பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை... சீரழித்த ஓட்டுநர் கைது...!

ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்தில் பயணம் செய்த குமரி கல்லூரி மாணவிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம்-ஓட்டுநர் அதிரடி கைது. மகளைப் போல் இருக்கிறாய் என கூறி மாணவியை சீரழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவரின் 21-வயதான மகள் கோயம்புத்துரில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக விவசாயின் மனைவியும், மகளும் கோயம்புத்தூர் கல்லூரிக்கு செல்ல தனியார் ஆமினி பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்த வல்சலம் என்பவரது மகன் அனீஷ்(36) , இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு, இவர் அந்த ஆம்னி பேருந்தில் ஓட்டுனராக இருந்துள்ளார். அவர் தாய் மகள் இருவரிடமும் பாசமாக பேசி எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என கூறி பஸ் நிறுத்தும் இடங்களில் எல்லாம் அவர்கள் கேட்ட உதவிகளை செய்துள்ளார்.மேலும் அவரின் தாயாரிடம் தயக்கமும் இன்றி கூறுங்கள் அவள் எனது மகளை போன்று இருக்கிறாள் எனக் கூறியுள்ளார். 

ஒரு கட்டத்தில் தாயாரிடம் நீங்கள் அங்கும் இங்குமாக அலைய வேண்டாம் ,நான் கல்லூரிக்கு சென்று வர உதவி செய்கிறேன் என கூறியுள்ளார். இதனை அவர்கள் நம்பி உள்ளனர். இதனால் மாணவி விடுப்பிற்கு வந்து விட்டு திரும்ப கல்லூரிக்கு செல்லும் போதும் விடுப்பிற்கு வரும் போதும் அனிஷ் ஓட்டி செல்லும் பேருந்தில் நம்பி அனுப்பி வைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி மாணவி கோயம்புத்தூரில் இருந்து அனீஷ் ஒட்டி வந்த பஸ்சில் ஸ்லீப்பர் பெட்டில் தூங்கிய படி வந்துள்ளார். அப்போதே பேருந்தை வேறு ஒரு ஓட்டுநர் ஓட்டி கொண்டு இருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட அனீஷ் மாணவி படுத்து இருக்கும் இடத்திற்கு வந்து மாணவியை தட்டி எழுப்பி “பசிக்குது என்றால் இந்த பிஸ்கட்டை சாப்பிடு” என கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆபாச படம் காண்பித்து ஓரினச்சேர்க்கை... 5 சிறுவர்களை சீரழித்த விடுதி போலி வார்டன் போக்சோவில் கைது...!

அதனை அந்த மாணவியும் நம்பி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனை மாணவி சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அனீஷ் மாணவியை பலாத்காரம் செய்து உள்ளார். மறுதினம் காலையில் நாம் இருவருக்கும் எல்லாம் முடிந்து விட்டது என்று அனீஷ் கூறியுள்ளார். உடனே மாணவி அழுது கொண்டு அம்மாவிடம் இதைப்பற்றி கூறுவேன் என்று சொல்லவே, அனீஷ் கத்தியை காட்டி மிரட்டி உன்னையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் கொன்று விடுவேன் எனவும் நேற்று இரவு நடந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.

அதன்பின் தனியாக பேசுவதற்கு என்று மாணவியை இரண்டு முறை வெளியே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . அதையும் வீடியோ எடுத்து வைத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மாணவியின் உயிருக்கும் , அவரது குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பயணத்தின் போது ஓட்டுனரை நம்பி சென்ற மாணவிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நம்பிக்கை மோசடி செய்து கற்பழித்து, வீடியோ எடுத்து வைத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த அனீஷ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share