×
 

கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

வீட்டினுள் கொசு புகை மருந்து அடுதத சில நேரத்தில் இருவர் பலி - பொதுமக்கள் வாக்குவாதம்.

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சியில் 7- வார்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து அப்பகுதியில் சுகாதார பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், குடிநீர் வடிகால் பிட்டர் ரெஜின் உட்பட பல அதிகாரிகள், ஊழியர்கள் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி ரோட்டில் உள்ள 7-வது வார்டு பகுதிக்குச் சென்று (Pyrephrum) பிரிபர்ம் என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட புகை மருந்தை அளவுக்கு அதிகமாக அடித்துள்ளதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்(65) வீட்டினுள் சென்று புகை மருந்தை பேரூராட்சி ஊழியர்கள் அடித்துள்ளனர்.

அதற்கு அவரது மனைவி பாக்கியம் மற்றும் அவரது மகள்கள் சபரி நிவேதா, ஹேமா ஆகியோர் அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் உடன் வந்தவர்களிடம் புகை மருந்து அடிக்க வேண்டாம் எனது தந்தைக்கு சுவாசக் கோளாறு உள்ளது என மன்றாடி கெஞ்சியுள்ளனர். அதையும் தாண்டி புகை மருந்து தொடர்ந்து அடிக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் எங்களுக்கு அரசாணை வந்துள்ளது.

நாங்கள் வீட்டினுள் சென்று புகை அடிப்போம். தேவைப்பட்டால் உள்ளே இருப்பவர்களை வெளியே அழைத்து வந்து வையுங்கள் என்று மிரட்டும் தோணியில் பேசியபடி புகை மருந்தைத் தொடர்ந்து அடிக்க அனுமதித்துள்ளார். அதற்கு பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு புகை மருந்தை வீட்டினுள் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாக்கடை வடிகால் உள்ள பகுதியில் மருந்து அடியுங்கள் எங்கள் வீட்டினுள் அடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் அடுத்த தெருவிற்கு பேரூராட்சி ஊழியர்களுடன் சென்று கொசு புகை மருந்தை தொடர்ந்து அதிக அளவில் அடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ராணி என்கிற பிரேமா(75) என்பவர் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதையும் பொருட்படுத்தாமல் அவரின் வீட்டின் சுற்று வட்டார பகுதிகளிலும் அதிக அளவு புகை மருந்தை அடித்துள்ளனர். அவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுவதாக அவரது உறவினர் சுசீலா பேரூராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதையும் பொருட்படுத்தாமல் அங்கேயும் கொசு மருந்து அடித்துள்ளனர். இது போல் இப்பகுதியில் மேலும் சிலர் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதை பொருட்படுத்தாமல் அப்பகுதியில் கொசு மருந்து புகை அதிக அளவில் அடிக்கப்பட்டது. பின்னர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து பேரூராட்சி அதிகாரிகள் கொசு மருந்து அடிப்பதை நிறுத்திவிட்டு திரும்பிய நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் மோகன் என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் குடும்பத்தினர் கண் முன்னே உயிரிழந்தார். 

அதேசமயம் மூதாட்டி ராணி என்கிற பிரேமா அடுத்த 1 மணி நேரத்திற்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆவேசமடைந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். இறந்தவர்களின் உயிர்களுக்கு நியாயம் கேட்டு போராடுவோம். கொசு புகை மருந்து அடிக்கும் போது சரியான அளவில் மருந்து கலக்கப்பட்டு அடிக்கப்பட்டதா? இல்லை  அதிக அளவில் கலக்கப்பட்டதா? என்பதை மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி செயல் அலுவலர் மற்றும் உடன் இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share