இந்தியாவின் விமான சேவையை முடக்க சதி?! டெல்லி சென்ற விமானங்கள் திக்! திக்! அலசும் அஜித் தோவல்!
நம் நாட்டு விமான சேவையை முடக்க இந்த சதி நடந்ததா என்பதை கண்டறிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலை மையில் உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது.
இந்தியாவின் மிகவும் பரபரப்பு மிக்க விமான நிலையங்களில் ஒன்றான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டெல்லி), தினமும் 1,500 விமானங்கள் வரை கையாள்கிறது. கடந்த வாரம், இங்கு ஏற்பட்ட ஜிபிஎஸ் (GPS) தரவுகளின் குளறுபடி, விமான போக்குவரத்தை முடக்கியது. விமானிகளுக்கு வழங்கப்பட்ட வான்வழி தகவல்கள் தவறானவையாக இருந்ததால், அவர்கள் குழம்பினர். விமானத்தின் நிலை, நிலப்பரப்பு எச்சரிக்கைகள் வழக்கத்துக்கு மாறாக இருந்தன.
டெல்லியிலிருந்து 60 நாட்டிக்கல் மைல் (சுமார் 111 கி.மீ.) வரை வான்வழிகள் குழப்பமாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக, 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானன. 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ போன்ற அருகிலுள்ள நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் இடர்பாட்டுக்கு ஆளானனர்.
இந்த சம்பவம், தானியங்கி ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக நடந்ததா, அல்லது சைபர் தாக்குதலா, அல்லது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை 'ஹைஜாக்' செய்யும் சதியா என்பதை அறிய தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விமானிகள் தரை கட்டுப்பாட்டு அறை (ATC)யுடன் தொடர்பு கொண்டபோது, ஜிபிஎஸ் தரவுகள் போலியானவையாக இருந்ததாக புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: 16 வயசு ஆகலயா..!! அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஆஸ்.,-வில் வந்தாச்சு புது ரூல்..!!
இதனால், ATC மையம் பழைய 'மேனுவல்' (கைமுறி) முறைக்குத் திரும்பியது. இந்த கோளாறு, விமான நேவிகேஷன் முறைகளை திசைதிருப்பும் 'ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்' (GPS Spoofing) தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, போலியான செயற்கைக்கோள் சிக்னல்களை உருவாக்கி விமானங்களை தவறான இடத்திற்கு அழைத்துச் செல்லும் நவீன சைபர் தாக்குதல்.
இதற்கிடையே, டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என சந்தேகத்தை அதிகரித்துள்ளது. விஷயம் மிகவும் தீவிரமானது என்பதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு (NCSC)யின் உதவியுடன் விசாரிக்கிறது.
இந்திய கணினி அவசர ஊடக அணுகல் குழு (CERT-In), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. விசாரணை முடிவுகள் வெளியான பிறகே உண்மை தெரியும். இருப்பினும், இந்த சம்பவம் இந்தியாவின் விமான போக்குவரத்து பாதுகாப்புக்கு பெரும் எச்சரிக்கை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2023 நவம்பரிலிருந்து 2025 பிப்ரவரி வரை, இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் 465 ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அமிர்தசர், ஜம்மு போன்ற இடங்களில் இது அதிகம். டில்லி சம்பவம், எல்லைக்கு அப்பால் நகர்த்தப்பட்டிருக்கலாம். ஸ்பூஃபிங், ஜம்மிங்கிலிருந்து வேறுபடுகிறது.
ஜம்மிங் சிக்னல்களைத் தடுக்கும் அதே நேரம், ஸ்பூஃபிங் போலியான தகவல்களை அனுப்பி தவறான இடத்தை காட்டுகிறது. இது போர் நிலைகளில் பயன்படுத்தப்படும். இந்தியாவில், 2024 டிசம்பரில் கஜகஸ்தான் விமான விபத்து (38 பேர் இறப்பு) ரஷ்யன் ஜிபிஎஸ் தடை காரணமாக இருந்தது. 2025 மார்ச்சில், மியான்மருக்கு உதவி கொண்டு சென்ற இந்திய விமானம் சீனா சார்ந்த ஸ்பூஃபிங்கை சந்தித்தது.
விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாய்டு கிஞ்சராப்பு, நவம்பர் 9 அன்று ATC டவரைப் பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை மதிப்பிட்டார். இந்த சம்பவம், இந்தியாவின் விமானத் துறை தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. 2025 ஆகஸ்ட் அறிக்கையில், போக்குவரத்து நிலைக்குழு, ATC தானியங்கி அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்த ஸ்பூஃபிங், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். விமான நேவிகேஷன், நேர ஒத்திசைவு போன்றவற்றை பாதிக்கிறது. சீனம், ரஷ்யா போன்ற நாடுகள் இதைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில், விமான போக்குவரத்து வளர்ச்சியுடன், சைபர் பாதுகாப்பு அவசியம்.
இந்த விசாரணை, உண்மையான காரணத்தை – தொழில்நுட்ப கோளாறா, சைபர் தாக்குதலா, அல்லது வெளிநாட்டு சதியா – தெரிவிக்கும். விமானிகள், ATC ஊழியர்கள், பயணிகள் பாதுகாப்புக்காக, உடனடி நடவடிக்கைகள் தேவை. DGCA, ஸ்பூஃபிங் சம்பவங்களை 10 நிமிடங்களுக்குல் அறிவிக்க விமான நிலையங்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவின் விமானத் துறையை புதிய சவால்களுக்கு தயாராக்குகிறது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்.. முதியவருக்கு ஆயுள் தண்டனை... கோர்ட் உத்தரவு...!