இனி EV ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி..! டெல்லி அரசு அதிரடி முடிவு..!
டெல்லியில் காற்று மாசு காரணமாக முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டை தீவிரமாக குறைக்கும் வகையில் காற்று தர மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது வாகனப் போக்குவரத்து துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டெல்லியில் மட்டும் மின்சார ஆட்டோக்கள் புதிய பதிவுக்கு அனுமதிக்கப்படும். படிப்படியாக இந்த விதி NCR பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்த நடவடிக்கை வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசுக்களை கணிசமாக குறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. CAQM-ன் அறிக்கைகளின்படி, டெல்லி-என்சிஆர் பகுதியில் குளிர்காலத்தில் PM2.5 மாசுபாட்டுக்கு வாகனப் போக்குவரத்து முக்கிய காரணமாக உள்ளது.
இதனை கட்டுப்படுத்த EV-களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 2027 ஜனவரி 1 முதல் டெல்லி என்சிஆர் பகுதியில் புதிய L5 வகை மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சார மாடல்களாக மட்டுமே பதிவு செய்ய அனுமதி. பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோக்களுக்கு புதிய பதிவு இல்லை. 2028 ஜனவரி 1 முதல் குருகிராம், பரிதாபாத், சோனிபத், காசியாபாத், கௌதம் புத்த நகர் உள்ளிட்ட உயர் வாகன அடர்த்தி கொண்ட மாவட்டங்களுக்கு இந்த விதி நீட்டிக்கப்படும்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்..!! ஓடும் பஸ்ஸில் கதறிய பெண்..!! டெல்லியில் அரங்கேறிய கொடூரம்..!!
2029 ஜனவரி 1 முதல் NCR-ன் மீதமுள்ள பகுதிகளுக்கும் இந்த விதிமுறை விரிவுபடுத்தப்படும். இந்த மாற்றம் புதிய பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஆட்டோக்கள் இயங்கலாம். ஆனால், படிப்படியாக அவற்றை EV-களுக்கு மாற்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
இதையும் படிங்க: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!! ஸ்விஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ..!! 6 பயணிகள் காயம்..!!