ஆபாச வீடியோ... வசமாக சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா... சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி ஆக்ஷன்...!
இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு திருச்சி சாதனா , நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோரின் . ஐடி- களை மூட சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி நடவடிக்கை.
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி , சிறுவர்களை சீரழிக்கும் திருச்சி சாதனா , நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் நான்கு சட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.
சேலம் மாநகர் குகை லைன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அஜித். இவர் தனது வழக்கறிஞர்கள் நண்பர்களுடன் சென்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று கொடுத்திருந்தார். அதில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 18 வயதிற்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செக்ஸியான வெளியீடுகளை தங்கள் ஐடி பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருச்சி சாதனா , நடிகை தர்ஷா குப்தா, சூரிய பிரபா , சென்னை ஹனி , அபிநயா சித்ரா , பிரியங்கா ராஜ் , சரண்யா , ஐஸ்வர்யா சிவா , திவி திலகவதி , தீபா கரூர் ஆகியோர் லைவில் வந்து சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர்.
இதையும் படிங்க: செப்.1 ல் மேட்டூர் அணை திறப்பு..! பாசனப் பணிகளுக்கு கிரீன் சிக்னல்...விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!
அதன் பிறகு ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் எல்லாவற்றையும் காட்டுவேன் என கூறுகின்றனர். இவ்வாறு கூறி இளைஞர்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்கின்றனர். இதன் மூலம் மாதம் தோறும் பல லட்சங்களை சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கை இளைஞர்களை சீரழிக்கிறது.
எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுவை பெற்ற சைபர் கடை போலீசார் திருச்சி சாதனா நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீதும் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட நாலு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து அவர்களது சமூக வலைதளங்களை முடக்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர் மேலும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!