“அவர் டவுசரையே உருவிட்டாங்க”... பதவி பறிபோன அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி...!
அறிவாலயத்தின் அடி செங்கல்லை உருவுவேன் என சொல்லிய நபரின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது எனவும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என செந்தில் பாலாஜி ஆவேசம்
கோவை தெற்கு தொகுதி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு, பகுதி பெரிய கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செந்தில் பாலாஜிக்கு பெண்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி திமுகவின் உதயசூரியன் சின்னம் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். வார்டு வாரியாக மக்களை நடந்து சென்று சந்தித்து வருகிறோம். மீண்டும் மக்களை வீடுகளுக்கு நேரில் சென்று சந்திப்போம். மக்கள் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்கிறார்கள், காரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு கொடுத்த ஏராளமான திட்டங்கள் மக்களை மகிழ்ச்சியில் வைத்துள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் உதயநிதி முதலமைச்சர் ஆனால் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறிய கேள்வி குறித்து கேட்டும் பொழுது எங்கள் கட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட அவர்களுக்கு என்ன இருக்கிறது. மூன்று முறை ஆட்சிக்கு வந்த பாஜக தமிழ்நாட்டிற்கு செல்லும்படி என்ன திட்டத்தை செய்தார்கள்?? என கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவின் மீதான துணை முதல்வர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவில் முதல் மாநிலமாக நாம் இருக்கிறோம் என்பதை எந்த தனியார் அமைப்போ நாங்களும் சொல்லவில்லை மத்திய அரசுதான் கூறியது. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் டபுள் இன்ஜின் சர்க்கார் என்றார்களே அப்படி என்ன வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!
தொடர்ந்து திமுகவின் தோல்விக்காக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் பியூஷ் கோயல் தினமும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று கேள்விக்கு, அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன் என்ற சொல்லிய நபருக்கு பதவி பறிக்கப்பட்டுவிட்டது. முதலில் அவருடைய டவுசரை போட்டுக்கொண்டு வேலையை பார்க்கச் சொல்லுங்கள் என காட்டமாக பதில் அளித்தார்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!