×
 

மின்துறை அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய்..! திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம்..! விளாசல்..!!

திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் பல மாவட்டங்களில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு சம்மந்தமாக, மின்துறை அமைச்சர் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக தவறான குற்றச்சாட்டு முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்கழகத் தொ.மு.ச. பொதுச்செயலாளர் திரு.பா.மணிமாறன் விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் 2021 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் 2026 வரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கும் குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் பல நன்மைகள் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சுமார் 3 கோடியே 36 இலட்சத்து 55 ஆயிரம் நுகர்வோர்கள் இருக்கின்ற நிலையில், அவர்களின் உட்சபட்ச மின் தேவையான 27,307 மெகாவாட்bமின்சாரத்தை எவ்வித தடையும் இன்றி வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.

கடந்த 5 ஆண்டுகால கழக ஆட்சியில் தேவைக்கேற்ப துணைமின்நிலையங்களை அதிகப்படுத்தியும், மின்விநியோகக் கட்டமைப்பை கூடுதலாக நிறுவியும் மற்றும் பலப்படுத்தியும், ஆங்காங்கே புதிய மின்மாற்றிகளை அமைத்தும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதுவாக HT மற்றும் LT லைன்களை புதியதாக நிறுவியும் மின்நுகர்வோருக்கு எவ்விதமாக இடர்பாடுகளும் ஏற்படாதாவாறு மிகச்சிறந்த நிர்வாகத் திறமையுடன் கையாளப்பட்டதே, கடந்த தி.மு.கழக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கிட காரணமாகும் என்று தெரிவித்து உள்ளார்.பொதுமக்களின் புகார்களை 2021-ல் மின்னகம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து எவ்வித காலதாமதம் இன்றி பொதுமக்கள் பயன்படும் வகையில் புதிய மின்இணைப்பு, பெயர்மாற்றம் உள்ளிட்ட மற்ற சேவைகளும் சிறப்பாக தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதை ஏதோ இந்த அரசு வந்த பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது போல ஒரு அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் உட்சபட்ச மின்தேவை கடந்த 29.04.2026 அன்று 21,307 மெகாவாட் அதே நாளில் உட்சபட்ச மின்நுகர்வு 471.456 மில்லியன் யூனிட் ஆகும். கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 108 டிகிரி வரை இருந்தது. அதன் காரணமாக மின்சாரம் நுகர்வு உயர்ந்துள்ளது. ஆகையால் மின்விநியோகத்தில் கடும் இடர்பாடுகள் ஏற்பட்டடுள்ளது. அதனால் தற்சமயம் கடந்த ஒரு வாரமாக மின்நுகர்வோரின் தேவையை சமாளிக்க முடியாமல் கடும் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்து இந்த அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோன்று மின்விநியோகத்தில் இடர்பாடுகள் ஏற்படும்போது அனைத்து மின்தொழிற்சங்க நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து அதற்கான தீர்வு காணப்பட்டது. கோடை காலத்தில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து எப்படி பெறப்போகிறோம் என்று முன் கூட்டியே மின்வாரிய அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் விவாதித்து முன்னெச்சரிக்கைகான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மின்சாரத்துறை அமைச்சர் கடந்த கால தி.மு.க ஆட்சியின் மீது பழிப்போட்டு தப்பிக்க முயற்ச்சிக்கிறார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் தோல்வியால் மக்களை மறந்த திமுக., அதிமுக.,,?! பல ஆண்டு தண்ணீர் பந்தல் கலாச்சாரம் மறந்து போச்சு!

மேலும் ஏற்பட போகும் கூடுதல் மின்தேவைக்காக எவ்வித முன்நடவடிக்கை எடுக்காமல் மின்சாரதுறை பற்றிய போதுமான புரிதல் பெறாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை என்றும் தி.மு.க ஆட்சியின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு இனிமேலாவது துறைரீதியாக அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவாதித்து மின் தட்டுப்பாட்டை நீக்கி மக்களை காப்பாற்ற இந்த அரசு முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share