கல்லூரி வளாகத்தில் பாலியல் மருந்துகள்..! சிதறி கிடக்கும் மது பாட்டில்கள்..! போலீஸ் தீவிர விசாரணை..!
நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளாகத்தில் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஒரு பொறியியல் கல்லூரியில் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் மற்றும் ஊசிகளுக்கு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வி பயிலும் இடத்தில் எப்படி பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் வந்தது என்றும் யார் இதனை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் முழு விசாரணை நடத்தி இது போன்ற செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் பாலியல் மருந்துகள் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவிலில் பொன் ஜெஸ்லி என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாலியல் உணர்வை தூண்டும் ஊக்க மருந்துகள் கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் வளாகத்தில் பாலியல் உணர்வை தூண்டும் மருந்து பாட்டில் மற்றும் ஊசிகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் மருந்து, ஊசிகள் மட்டுமில்லாமல் கலையரங்கத்திற்கு பின்புறம் மது பாட்டில்களும் கிடப்பதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடி ஒளிந்த அறிவாளிகள்... அதையெல்லாம் கண்டுக்காதீங்க... ஆதவ் அர்ஜுனாவுக்கு மா. சு. பதிலடி...!
பாலியல் ஊக்க மருந்துகள் எப்படி கல்லூரி வளாகத்திற்குள் வந்தது, மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா, யார் காரணம் என்பது உள்ளிட்டவை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி பயிலும் கல்லூரி வளாகத்தில் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் கிடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டால் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்... ரீல்ஸ் பெண் தலைமறைவு.. தேடுதல் வேட்டை தீவிரம்..!