×
 

பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்து அவரது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ என்ற நூலின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.

மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்து அவரது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ என்ற நூலின் இரண்டாம் பாகம், இன்று (ஜூலை 21) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக வெளியிடப்பட்டது.

இந்த நூலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. ‘குமுதம் சிநேகிதி’ பத்திரிகையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை எழுத்தாளர் துர்கா ஸ்டாலின் எழுதிய வாழ்க்கை பதிவு தொடர், வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகம், திருமணம் முதல் 2017ம் ஆண்டு வரை உள்ள நிகழ்வுகளை பதிவு செய்த முதல் பாகத்தைத் தொடர்ந்து, கலைஞர் மறைவு, கொரோனா காலம், 2021 தேர்தல் வெற்றி, முக்கிய சுற்றுப்பயணங்கள் போன்ற அரசியல் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளையும் நெஞ்சைத் தொடும் அழுத்தமான முறையில் பதிவுசெய்கிறது.

புத்தக வெளியீட்டு விழாவில், முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட, டஃபே குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இன்பன் உதயநிதி, நலன் சபரீசன், தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகிய ஸ்டாலின் பேரன்கள் மற்றும் பேத்திகள் சிறப்பு பிரதிகளை பெற்றனர்.

இதையும் படிங்க: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்... மனமுருகி தரிசித்த துர்கா ஸ்டாலின்...!

தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன், பதிப்பாசிரியராக திமுகவின் இலக்கியத் திட்டங்கள் குறித்து உரையாற்ற, லோகநாயகி புத்தக வடிவமைப்பு குறித்து பேசினார்.

இந்த நிகழ்வில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ‘தி இந்து’ குழுமத்தின் என். ராம், ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

முன்னதாக, இந்த நூல் ஜூலை 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்து மரணத்தை அடுத்து நிகழ்ச்சி ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிகழ்வு, குடும்பத்தையும், அரசியல் வரலாற்றையும் நேர்மையான பார்வையில் பதிவு செய்யும் நூலுக்கான மனமகிழ்ச்சியான வெளியீடாக அமைந்தது.

இதையும் படிங்க: உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share