×
 

#BREAKING: "ரூ.2.47 லட்சம் கோடி கடன்... ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள்..! மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

மின்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை அமைச்சர். நிர்மல் குமார் வெளியிட்டார். 25 ஆண்டுகள் மின் துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மின் துறையில் 2001 முதல் 2006 வரை 8,355 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் 2006 முதல் 2011 வரை 35 ஆயிரத்து 463 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மின்துறையில் 2011 முதல் 2016 வரை 56 ஆயிரத்து 361 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட இருப்பதாகவும் 2016 முதல் 2021 வரை 58 ஆயிரத்து 534 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் துறையில் 2021 முதல் 2026 வரை 34,447 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் 2,47,130 கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவித்தார். மின்வாரியத்தில் 3495 மெகாவாட் சொந்த உற்பத்தியாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் துறையில் 65 ஆயிரத்து 921 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 635 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 16,782 பணியாளர்கள் ஓய்வு பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20,240 பேர் கடந்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய் அரசு... நாளை மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!

மின்சாரத் துறையில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கவில்லை என்றும் முந்தைய ஆண்டுகளில் செய்ததை தான் செய்திருக்கின்றனர் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார். மின் துறையில் புதிதாக எதுவும் செய்யாமல் எப்படி செலவுகள் அதிகமானது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் தனியார்மயம்..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share