×
 

போலி வாக்காளர்களை களையெடுக்கும் பணி தீவிரம்!! எஸ்ஐஆர் முன்னேற்பாடு! 22 மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்!!

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, கோவா, உத்தர பிரதேசம் உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நடந்துள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் (ECI) நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு பீகாரில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் அகற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், நீக்கப்பட்டவர்களில் மிகக் குறைவானவர்களே ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பித்தனர். அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன. SIR பணி மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் துல்லியமாகவும் நடைபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

பீகார் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணி நடைபெற்றது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் பெறப்பட்டு, இறுதி பட்டியல் தயாராக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதையும் படிங்க: இன்னும் எவ்வளவு டைம் ஆகும்?! அதிமுக, இரட்டை இலை வழக்கு! தேர்தல் ஆணையம் பதிலளிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு!

இதற்கிடையே, வரும் ஏப்ரல் மாதத்தில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணியை தொடங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாக தொடங்குமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் களப்பணியாளர்கள், சரிபார்ப்பு அதிகாரிகள் மூலம் பணி நடத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணி 2-3 மாதங்களுக்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 22 மாநிலங்கள் உள்ளிட்ட இறுதி கட்டம் முடிந்தால், நாடு முழுவதும் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கள் முழுமையாக நீக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை நாட்டின் தேர்தல் செயல்முறையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ல் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், தூய்மையான வாக்காளர் பட்டியல் மக்களாட்சியை வலுப்படுத்தும்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை...! தமிழ்நாடே கொந்தளிக்கும்... பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share