×
 

#BIG BREAKING முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

தேர்தல் ஆணயத்தின் இணைய பக்கம் முடங்கியதால் வாக்காளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியான நிலையில் தேர்தல் ஆணையத்தினுடைய இணைய பக்கம் முடங்கியதால் வாக்காளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வரைவு  வாக்காளர் பட்டியலின் பெயர் இடம் பெறாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் படிவம் 6,7,8 மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கமானது தற்போது முடங்கி இருப்பதால் வாக்காளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். 

தமிழக தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை சோதனை செய்து பார்த்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தினுடைய இணையதளம் முடங்கி இருக்கிறது. காரணம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்களுடைய பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்ப்பதற்காக இணையதளத்தை நாடிய காரணத்தினால் இணையதளம் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இணையதளத்தை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாளை முதல் அல்லது நள்ளிரவு முதலே கூட வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களை பார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 எனவே தமிழ்நாடை பொறுத்தவரையிலே எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பிறகு ஒவ்வொரு பூத் லெவலிலும் அதாவது நீங்கள் எந்த பகுதியிலே எந்த பள்ளியிலே வாக்களிக்கிறீர்களோ அந்த பகுதியிலேயே இந்த பட்டியல் ஒட்டப்படும். அதன் மூலமாகவும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதால் இணையதளத்தில் இன்று பார்க்க முடியவில்லை. 

இதையும் படிங்க: கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

ஆனால் நாளை முதல் பார்த்து கொள்ளலாம் என்று தெரிய வருகின்றது. ஒவ்வொரு வாக்காளரும் கட்டாயம் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்று சரிபார்த்து கொண்டு, இல்லாதவர்கள் உரிய படிவத்தையும் ஆவணத்தையும் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயரை இடம்பெற செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share