×
 

குன்னூர் தொகுதியில் கள்ள ஓட்டு.? வாக்களிக்க வந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

குன்னூர் தொகுதியில் வாக்களிக்க வந்த இளைஞரிடம் ஏற்கனவே அவரது ஓட்டு போடப்பட்டு விட்டதாக கூறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் தனது ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விட்டதாக வாக்காளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து உள்ளது.

கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. உரிய ஆவணங்கள் காண்பித்தால் மட்டுமே ஓட்டு போட இயலும் என்ற சூழ்நிலை நிலவும் நிலையில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளரின் ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விட்டதாக குறி வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது பெயரில் ஓட்டு போட்டது யார் என்று கேட்டு அந்தப் பெண் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். ஏற்கனவே ஆழ்வார்பேட்டையில் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டை இருந்தது சர்ச்சையை கிளப்பியது. அதற்குள் மதுரவாயல் தொகுதியில் தனது ஓட்டை வேறு ஒரு நபர் போட்டு விட்டதாக பெண் வாக்காளர் ஒருவர் வாக்குவாதம் செய்த நிலையில் குன்னூர் தொகுதியிலும் இதே சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இளைஞர் வாக்களிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், தனது ஓட்டை யாரோ போட்டு விட்டார்கள் என்றும் கள்ள ஓட்டு போடப்பட்டு விட்டதாகவும் கூறி குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்கு ஏற்படும் நிலை இப்படி என்றால் தமிழக முழுவதும் என்ன நடக்கிறது என்ற கேள்வியையும் அவர் முன் வைத்தார். 

இதையும் படிங்க: என் ஓட்ட யாரோ போட்டுட்டாங்க..! மதுரவாயல் தொகுதியில் பெண் பரபரப்பு புகார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share