×
 

கறார் காட்டிய போலீஸ்... இபிஎஸ்-ன் நாளைய பிரச்சாரம் ரத்து...! ஏன் தெரியுமா?

நாளை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தொடர்பாகவும், திமுக அரசின் குறைபாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து வருகிறார். அது மட்டுமல்லாது பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து ஆலோசனைகளையும் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதிமுக தேர்வு செய்த இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. நாமக்கல்லில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக அதிமுக தேர்வு செய்த 3 இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாற்று இடம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் விதிமுறைகள் வகுக்கும் வரை நெடுஞ்சாலைகளில் எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: கரூருக்கு போனீங்களே கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகல? நீலி கண்ணீர் வடிக்காதீங்க ஸ்டாலின்... விளாசிய இபிஎஸ்..!

நெடுஞ்சாலையில் அனுமதி அளிக்கப்படாது என நீதிமன்றத்தில் அரசு கூறி இருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்ள இருந்த இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பட்டா இடத்தை தேர்வு செய்யுமாறு அதிமுகவினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தினர். 

இந்த நிலையில், நாளை இரண்டு இடங்களில் நடைபெறவிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதன் நீட்சியாக இரண்டு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம் ரத்து செய்ய ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: WAIT & SEE... அமைதி வெற்றிக்கான அறிகுறி... சூசகமாக பேசிய செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share