தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி போலீசுக்கு ஆப் மூலம் வார விடுமுறை...!
தமிழ்நாட்டில் முதல் முறையாக குமரி போலீசார் வார விடுமுறை எடுக்க புதிய செயலி.. எஸ்.பி. ஸ்டாலின் நடவடிக்கை.
தமிழகத்தில் போலீசாருக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு காவல் நிலையங்களில் வார விடுமுறை சரியாக வழங்கப்படவில்லை என்று பல்வேறு புகார்கள் வந்தன. குமரி மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதை அமல்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டத்தில் போலீசாரின் வார விடுமுறையை கண்காணிக்கும் வகையில் தனி செயலி (அப் ) தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. எஸ்.பி ஸ்டாலின் இந்த செயலி இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
இனி போலீசார் இந்த செயலி மூலமாக விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். யார்?யார்? எப்போது வார ஒரு விடுமுறை எடுக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக வார விடுமுறை அனுமதிக்கப்பட்டு இருக்கிறதா? என்பதையும் நேரடியாக எஸ்.பி. கண்காணிக்க முடியும். இதன் படி குமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தனித்தனி கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: “தமிழகத்தில் தொழில் துறை முடங்கியிருக்கு, பெண்களுக்கு பாதுகாப்பில்ல” - மத்திய இணையமைச்சர் ஆவேசம்...!
அந்த காவல் நிலையங்களில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த கியூ ஆர் கோடு மூலம் இந்த அப் மூலம் வார விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதை அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அப்ரூவல் செய்ய வேண்டும். இன்ஸ்பெக்டர் அந்த வார விடுமுறையை நிராகரித்து இருந்தால் டி.எஸ்.பி.க்கள் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். அவர்களும் அந்த வார விடுமுறையை நிராகரித்து இருந்தால் எஸ்.பி. ஆராய்ந்து அனுமதி அளிக்க வேண்டும்.
ஒருவேளை தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை இருந்தால் இந்த வார விடுமுறை நிராகரிக்கப்பட்டு வேறொரு நாளில் வழங்கப்படும் . இதன் மூலம் ஒவ்வொரு காவலர்களும் எவ்வாறு வார விடுமுறை எடுக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக வார விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும்.
இதே போல தற்போது போலீசருக்கான ஏ.ஐ. ஹேண்ட் புக் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஆப் பயன்படுத்தி போலீசார் தங்களுக்கு நிர்வாக ரீதியாக உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி மதியழகன், ஏ. எஸ்.பி. லலித்குமார் மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வெளிய போகாதீங்க மக்களே.. இந்த 2 ஊருக்கு மஞ்சள் அலர்ட்டாம்.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்..!