×
 

கிரீன்லாந்தை கைப்பற்ற களமிறங்கும் அமெரிக்க ராணுவம்?!! அதிபர் ட்ரம்ப் சொல்வது என்ன?!

ஐரோப்பா, கிரீன்லாந்தைப் பற்றிப் பேசுவதை விட, உக்ரைன் போரில் கவனம் செலுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகின் மிகப்பெரிய தீவு நாடான கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து வெளிப்படையாக பேசி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் டிரம்ப் அச்சுறுத்தும் தொனியில் பேசி வருவதால், ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு டிரம்ப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். "கருத்து இல்லை" என்று மட்டும் கூறிய அவர், ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

டிரம்ப் கூறியதாவது: "ஐரோப்பா கிரீன்லாந்து பற்றி பேசுவதை விட உக்ரைன் போரில் கவனம் செலுத்த வேண்டும்." இந்த கருத்து உக்ரைன் - ரஷ்யா போரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், ஐரோப்பாவை அழுத்தம் கொடுப்பதாகவும் பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பேசிப்பாப்போம்! செட் ஆகலைனா அவ்ளோதான்! கிரின்லாந்தை மிரட்டும் ட்ரம்ப்!!

கிரீன்லாந்து ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது, அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வளங்கள் தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் கொண்டது என்பதால் டிரம்ப் இதை கையகப்படுத்த விருப்பம் தெரிவித்து வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் 10 சதவீதம் வரி விதித்துள்ளார். கடந்த சில தினங்களாக கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் என்று வெளிப்படையாக கூறி வந்த டிரம்ப், இப்போது சூசகமாக பதில் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் ஆகியவை இதன் பின்னணியில் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் இந்த நிலைப்பாடு உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? ஐரோப்பிய நாடுகள் என்ன பதில் அளிக்கும்? அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை எங்கு செல்கிறது? என்பது தற்போது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
 

இதையும் படிங்க: உத்தரவுக்கு காத்திருக்காதீங்க!! அமெரிக்கா அத்துமீறினா சுடுங்க! டென்மார்க் வீரர்களுக்கு பிரதமர் மெட்டே ஆர்டர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share