×
 

விளம்பரத்திற்காக விஜயோடு சண்டை! தி. மலை சம்பவம் கண்ணுக்கு தெரிலையா? விளாசிய காயத்ரி ரகுராம்...!

திருவண்ணாமலையில் இளம் பெண்ணை காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே பெண்ணை சீரழித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்சி வருகின்றனர். இந்த நிலையில், விளம்பரத்திற்காக விஜயுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், மோசமான நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் கவலை படவில்லை எனவும் அதிமுக மாநில மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் சகோதரியின் கண் முன்னே இளம் பெண் இரண்டு காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்றும் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வந்தார்., அந்த இளம் பெண்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். ஆந்திர அரசு தலையிட்டு பெண்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிக்காகப் போராட வேண்டும் என்றும் கூறினார். திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் விளம்பரத்திற்காக விஜய்யுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் செய்தது தவறு.. நின்னு போராடி இருக்கணும்... அதிமுக எம்.பி.யின் SUDDEN ரியாக்ஷன்...!

திமுக ஆட்சியில் மோசமான நிர்வாகம் மற்றும் மோசமான சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் கவலைப்படவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சரிந்துவிட்டது எனவும் சாடினார்.

இதையும் படிங்க: சகோதரி கண்முன்னே பெண்ணை வன்கொடுமை செய்த காவலர்கள்...! வெட்கக்கேடு... விளாசிய இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share