×
 

தவெக உடன் கூட்டணியா? காங்கிரசில் இணைப்பா? ஜி.கே.வாசன் அடுத்த அதிரடி முடிவு? யாருக்கு பச்சைக்கொடி?

விரைவில் டில்லி செல்லும் ஜி.கே.வாசன், காங்கிரசில் இணைவதா அல்லது அதன் கூட்டணியில் இணைவதா என்பது குறித்து, காங்., மேலிட தலைவர்களிடம் பேச உள்ளார்.

தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் மீண்டும் பரபரப்பாகி வரும் நிலையில், த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜ., கூட்டணியில் இருந்து த.மா.கா., விலகியுள்ள நிலையில், காங்கிரஸ் பக்கம் வாசன் நகர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய, காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி, த.மா.கா., நிறுவனத் தலைவர் மறைந்த ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளையொட்டி, அவரை புகழ்ந்து மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

இதன் பின்னர், காங்கிரசுக்கு ஆதரவான கருத்துகளை வாசன் தெரிவித்து வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை வாசன் சந்தித்து பேசியதும் அரசியல் அரங்கில் பேசுபொருளானது. இருவரும் நீண்ட கால நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டதாக த.மா.கா., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கூட்டணி மூலம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலை... கிருஷ்ணகிரியில் ஜி கே வாசன் பேட்டி..!!

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்துடனும் இணைந்து செயல்பட வாசன் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் காங்கிரசுடனான அரசியல் உறவையும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால், த.மா.கா., காங்கிரசில் இணைகிறதா அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறதா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் டெல்லி செல்ல உள்ள வாசன், காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழகத்தில் த.வெ.க., அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக வாசன் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சிக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளதாகவும், அதனால் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருத முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு பிறகே மக்களின் உண்மையான மனநிலையை மதிப்பிட முடியும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share