×
 

காவிரி டு கல்விக்கடன் வரை... தமிழ்நாட்டில் இத்தனை பிரச்சனைகளா?... தவெகவை லிஸ்ட் போட்டு விளாசிய ஜி.கே.வாசன்...!!

தட்களிலே விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மின் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மின்சாரம் கொடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உடைய மண்டல கூட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கூட்டத்தினுடைய நோக்கம் முதற்படியாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது உள்ளாட்சியிலே பல்வேறு பதவிகளிலே தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்த பொறுப்பாளர்கள் நண்பர்கள் அவரவர் சார்ந்த பகுதியிலே ஒரு நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பொறுப்பில் வெல்லக்கூடிய சூழல் ஏற்பட வேண்டும்.

அதற்கு ஒருபுறம் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் மறுபுறம் அட்சமயத்தில் உள்ள கூட்டணியை வலுபெற செய்ய வேண்டும். எனவே தாமக தூய்மையான பகுதிகளிலே பலமான பணியை செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக உள்ளாட்சியிலே அதிகம் வெல்லக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அதிலே அதிக இயக்கப் பணி மக்கள் பணிகளை செய்து உறுதியாக வெல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதியாக பணியாற்றத் தொடங்கியிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் தட்கள் மின்னிணைப்பு வேண்டி இரண்டு முதல் மூன்று லட்சம் வரை டெபாசிட் கட்டி விண்ணப்பித்து சுமார் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு 1500 கோடி டெபாசிட் இருக்கிறது.  கடந்த ஆட்சி காலத்திலே இது வசூலிக்கப்பட்டது. மின்னிணைப்பு விண்ணப்பித்த விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தட்களிலே விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மின் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மின்சாரம் கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா கைவிட்டுச் சென்ற திட்டம்! வேகம் காட்டும் முதல்வர் விஜய்?! பரபரக்கும் பட்டினப்பாக்கம்!

காவிரி -  குண்டாறு நதிகள் இணைப்பை தமிழக முதல்வர் பாரதப் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்கள். நீண்ட நாள் கோரிக்கை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். கீழ் பவானி பாசன நீராதாரத்தை மேம்படுத்தி பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், பாண்டியாறு - நல்லாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட கமிட்டி கேட்டுக் கொள்கிறது.

கல்விக் கடன் மிக முக்கியம். தற்போது பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்விக்கு மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மாணவர்களுக்கு முறையாக சரியாக கல்விக் கடன் கிடைப்பதில்லை. அதிலே அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளோடு கலந்து பேசி கடன் பெற மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமக வலியுறுத்துகிறது.

குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஸ்கலார்ஷிப் உதவித்தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும். பவானி பாசன வாய்க்கால் தற்போது கடும் வறட்சி மற்றும் மழை பெய்து போனதால் கால்நடைக்கு கூட தண்ணீர் இல்லாத ஒரு சூழல். எனவே ஒரு காலக்கெடுவுக்குள் எல்.பி.ஜி 1 மற்றும் எல்.பி.பி 2 பாசனப் பகுதியிலே உடனடியாக தண்ணீர் விடக்கூடிய நிலையை நீர்வளத்துறை ஏற்படுத்த வேண்டும்.

அவினாசி அத்திக்கடவு திட்டத்தை பொறுத்தவரையில் நீர் நிர்வாகத்தை மேற்கொண்டு குளம்கூட்டங்களுக்கு தண்ணீர் நிரப்பும் பணிகளை சீரமைக்க வேண்டும். ஆவின் பாலை பொறுத்தவரையிலே கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமை கருவேல மரங்கள் தமிழகம் முழுவதும் அகற்றக்கூடிய நிலையை அரசு விரைவிலே அந்தப் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

அதேபோல பவானி ரிங் ரோடு ஆரம்பிக்கும் இடத்திலே கோணவாய்க்கால் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அதை ஒரு காலக்கெடுவுக்குள் செய்யக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். அதேபோல ஈரோட்டிலே புற்றுநோய் மையம் ஆராய்கிறது தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

ரேஷன் கடைகளிலே தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பதும் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை.  அதேபோல வனவிலங்குகள், பயிர்கள் தொடர்ந்து வனவிலங்குகள் பயிர்களை தொடர்ந்து நாசப்படுத்துவதால் தடுப்பு வகையில் பஞ்சாயத்து தோறும் குழுக்கள் போட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
திருச்செங்கோடு புறவழிச்சாலை முழுமையாக அமைக்க வேண்டும்.

 சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையிலே உணவு ஆதாரமாக அரிசி விலை  கிடுகிடு என விலை உயர்ந்துள்ளது. எனவே திடீரென்று அரிசி உற்பத்தி குறைவு என காரணங்கள் காட்டி கிலோ அரிசி ரூபாய் 60 முதல் 75 வரை விற்பனை செய்வதால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு மிகக் கடினமாக இருக்கிறது. மிகுந்த ஏழையாக இருப்பவர்களுக்கு மூன்று வேளை உணவை சாப்பிடுவது கூட விலை அதிகம் கஷ்டமாக இருக்கிறது.

சேலம் மாவட்டத்தினுடைய குடிநீர் ஆதாரம் விவசாயம் பாதிக்கும் ஜவுளிப் பூங்கா சாயப்பட்டறையை அமைக்க அனுமதிக்கக் கூடாது என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. தாமக போராட்டம் நடத்தியது நானே நேரடியாக அதிலே கலந்து கொண்டேன்.

ஜவுளி பூங்காவுக்கு இறுதியாக அனுமதி வழங்கவில்லை என்ற கடிதத்தை கூட எனக்கு அமைச்சர் அனுப்பியதை தாமக மாவட்ட தலைவர் வெளியிட்டார்கள். தற்போது மீண்டும் இந்த பிரச்சனையை வேறு வேறு பெயர்களில் உருமாற்றம் செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்த சில தனியார் நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அரசு மக்களுடைய எண்ணங்களை இதில் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள

இதையும் படிங்க: ஸ்டாலின் vs காங்கிரஸ்: ‘எட்டப்பன்’ யார்? தமிழக அரசியலில் திடீர் மோதல்! பின்னணியில் என்ன நடக்கிறது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share