ரசாயன புகையால் திணறிய மக்கள்... என்ன தான் நடந்துச்சு..! விளக்கம் தர துறைமுகத்துக்கு ஆணை..!!
சென்னை தலைமைச் செயலக பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்ட நிலையில் விளக்கம் தர பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டு உள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் திடீரென வாயுகசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் மக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். இருமல், குமட்டல், மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்திற்கு அருகே தலைமைச் செயலகம் இருக்கும் நிலையில் வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. துறைமுகத்தில் ஏற்பட்ட வாயு கசிவால் சென்னை தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
துறைமுகத்தில் சல்ஃபர் வாயுகசிவு ஏற்பட்டதால் காற்றின் தரம் மோசமடைந்ததாகவும், காற்றில் வாயு கலந்ததால் சுவாச பாதிப்பு ஏற்படலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. வெப்பம் காரணமாக சல்பேட் வாயுகசிவு ஏற்பட்டதாக துறைமுகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சல்பேட் வேதியியல் மாற்றமடைந்து வெண்புகையாக படர்ந்தது.
இதனால் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். திடீரென ஏற்பட்ட இந்த வாயுகசிவால் பொதுமக்கள் பெரும் மச்சம் அடைந்துள்ளனர். காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் அமோனியா வாயுவால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. PM 2.5, PM 10 நுண் துகள்கள் மற்றும் NO2, NH3 வாயு கலவைகள் காற்றில் கலந்தன.
இதையும் படிங்க: லாரி மீது மோதிய மினி பஸ்! இந்தியர்கள் 7 உடல் நசுங்கி பலி! துபாயில் நேர்ந்த சோகம்!
ஜூன் 2இல் சென்னை துறைமுகத்தில் சல்பரில் இருந்து வெப்பத்தால் ரசாயன புகை வெளியேறி மக்கள் தவித்தனர். தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி நடந்த நிகழ்வு குறித்து தாமே முன்வந்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தலைமைச் செயலக பகுதியில் ரசாயன புகை பரவியது குறித்து சென்னை துறைமுகம், ஆட்சியர் விளக்கம் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடுக்கடலில் கைவிடப்படும் கப்பல்கள்! இந்திய மாலுமிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் பகீர்!