×
 

10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்... உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு... தங்கம் தென்னரசு சொன்ன டேட்டா...! 

உயர்கல்வித் துறைக்கு 8,505 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள், தம் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக, 2,172 கோடி ரூபாய் செலவில் 10 இலட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, இதுவரை 6,75,888 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக 1380 கோடி ரூபாய் செலவிலான முன்னோடித்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் மேம்படுத்துவதற்காக, கல்லூரிகளின் உட்கட்டமைப்பை 'பெருந்தலைவர் காமராசர் கல்லூரி
மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 909 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவாக மாறிவரும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளும் 11 அரசுப் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, அதி நவீன உற்பத்தித் திறன் முதலான 8 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சேலம், கோயம்புத்தூர். திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயர்கல்வியில் சமூகநீதியைப் பேணும் பொருட்டு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தொழிற்கல்வி பயில, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 54,301 மாணவர்களின் கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களை அரசே ஏற்று. இதுவரை 1,512 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10,563 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு..! இடைக்கால பட்ஜெட்டில் சிறப்பு கவனம்..!!

நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியைவிட ஏறத்தாழ இரு மடங்காக 47 சதவீதம் பெற்று தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.  மகளிர் கல்வியைப் போற்றிப் பாதுகாத்திட அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தைப் போன்று, ஆடவரும் உயர்கல்வி பெற்றிட முன்னெடுக்கப்பட்டதே தமிழ்ப் புதல்வன் திட்டம். ஆடவருக்கு உயர்கல்விக்காக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் இத்திட்டத்தில், இதுவரை 5,40,511 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை 767 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் உரிய முன்னேற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் 175 கோடி ரூபாய் கொண்ட செயல்திறன் ஊக்க நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக் கல்வி முடித்த மாணவர்கள் அவர்தம் விருப்பத்துக்கேற்ற கல்லூரிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்ட, “கல்லூரிக் கனவு” எனும்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில், 2 இலட்சத்து 58,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தாய்த் தமிழ்நாட்டில் கல்வி கற்று, தரணியை ஆளும் தகுதியைத் தமிழ் மாணவர் பெற்றிட, தமிழ்நாடு முதலமைச்சர்  கனவுத் திட்டமான.  “நான் முதல்வன்” திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share