சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!
கோவை சிறுமி கொலை சம்பவத்தில் என்ன நடந்தது என ஐஜி ரம்யா பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி விளக்கம் கொடுத்தார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து இருப்பதாக கூறினார். சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். குற்றவாளி கார்த்திக்கு உடந்தையாக இருந்த மோகன் என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்த்தி மற்றும் மோகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். பக்கத்து வீட்டில் வசித்த இளைஞர் கார்த்திக் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொண்டுள்ளான் என தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை குற்றவாளி கார்த்திக்கிற்கு மோகன் என்பவன் உதவியதால் இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் கூலி தொழிலாளிகள் என்று கூறிய ஐஜி, மாலை 6:00 மணிக்கு குழந்தை காணவில்லை என 100 என்ற எண்ணிற்கு தகவல் கிடைத்தது என்றும் இரவு 10 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சிசிடிவி ஆய்வு செய்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் குழந்தையை அழைத்துச் சென்றது தெரிந்தது என்றார். குற்றவாளி கார்த்தியை போலீசார் சுற்றி வளைத்த போது தப்பிய ஓடிய நிலையில் கார்த்திக்கிற்கு வலது கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவை கொடூரம்..! மன்னிக்க முடியாத குற்றம்..! கொதித்த முதல்வர் விஜய்..!
குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சிறுமி காணாமல் போன தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கியதாகவும் கூறியுள்ளார். முன்பகை இருந்ததா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!