×
 

"எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் நடன மற்றும் அணிவகுப்பு ஒத்திகைகள் நடைபெற்றன.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் வெகுவிமரிசையாகத் தொடங்கவுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் (Attari - Wagah Border) மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்டமான நடன ஒத்திகைகளும் வண்ணமயமான அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் இன்று தீவிரமாக நடைபெற்றன.

சுதந்திர தின விழாவையொட்டி அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் நாள்தோறும் நடைபெறும் புகழ்பெற்ற 'கொடியிறக்க நிகழ்வு' (Beating Retreat Ceremony) வரும் ஆகஸ்ட் 15 அன்று வழக்கத்தை விடப் புத்துணர்ச்சியுடனும் எழுச்சியுடனும் நடைபெறவுள்ளது.

தாயகத்தின் சுதந்திரத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு கலைக்குழுவினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி மற்றும் தேசபக்தி நடன ஒத்திகைகள் எல்லை வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றன.

இதையும் படிங்க: சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கம்பீரமான அணிவகுப்புடன் கூடிய பீட்டிங் ரீட்ரீட் நிகழ்வுக்குப் பெயர் பெற்ற இந்த எல்லைக் கோட்டில், விண்ணதிரும் தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே உள்ளூர் கலைஞர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் காண்போரைக் பரவசத்தில் ஆழ்த்தின. சுதந்திர தின விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எல்லையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், எல்லைப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, விழா ஏற்பாடுகளும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க: சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share