×
 

110 கிமீ வேகத்தில் பறக்கப்போகுது... இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி...!

ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொகுப்பின்  ‘ஆஸிலேஷன்’ (Oscillation) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தூய்மையான மற்றும் பசுமைப் போக்குவரத்து தொழில்நுட்பத்தை நோக்கி இந்திய ரயில்வே எடுத்து வைத்துள்ள ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஜிந்த் மற்றும் சோனிபத் இடையே இந்த ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது வட ரயில்வேயின் ஒரு முன்னோடி திட்டமாகும்.

ஹைட்ரஜன் ரயில் இயங்குவதற்கு தேவையான மின்சாரம் ஜிந்த் நகரில் உள்ள ஹைட்ரஜன் ஆலையில் இருந்து சீராக வழங்கப்படும். இந்த ஆலை, ரயிலை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் தேவையான ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும். இந்த ஆலையில் 3,000 கிலோகிராம் ஹைட்ரஜனை சேமித்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது இந்த ஆலை இறுதி கட்ட சோதனைகளில் உள்ளது.

இதையும் படிங்க: விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

இந்த ஹைட்ரஜன் ரயில்கள் வணிக ரீதியான சேவைக்கு வரும்போது, ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் உலகின் ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக இணையும். உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கிடையில், இங்கு நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூ.118 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புக்கு உகந்தது. முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிராட் கேஜ் பாதையில் இயங்கும் உலகின் மிக நீளமான (10 பெட்டிகள்) மற்றும் அதிக சக்தி வாய்ந்த (2400 kW) ஹைட்ரஜன் ரயில் இதுவாகும். இதில் தலா 1200 கிலோவாட் திறன் கொண்ட இரண்டு 'டிரைவிங் பவர் கார்கள்' மற்றும் எட்டு பயணிகள் பெட்டிகள் உள்ளன. அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் எனக்கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இஸ்ரேல் - லெபனான் போர்: 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; லெபனான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share