200 போர்க்கப்பல்கள் இலக்கு!! 2035 டார்கெட்! பாக்., சீனாவை கதற விடப்போகும் இந்தியாவின் சூப்பர் பவர் ப்ளான்!
வரும் 2035க்குள் 200க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களை கொண்ட கடற்படையாக இந்திய கடற்படையை மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம் என கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் நேற்று (பிப்ரவரி 27) இந்திய கடற்படையின் புதிய எதிரி நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான INS அஞ்சதீப் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி இந்த கப்பலை நாட்டுக்கு ஒப்படைத்து சிறப்பு உரையாற்றினார்.
"சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வங்காள விரிகுடா வழியாக தொலைதூர நாடுகளுக்கு கடல் பயணம் செய்தனர். இந்தியா எப்போதும் கடல்சார் நாகரீகமாகவே இருந்து வந்துள்ளது. நமது பாதுகாப்பு கடலோடு பிணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறுவார்" என்று அவர் நினைவூட்டினார்.
1972 முதல் 2003 வரை 30 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றிய பெத்யா கிளாஸ் வகை கப்பல்களை நினைவுகூரும் வகையில் INS அஞ்சதீப் அமைக்கப்பட்டுள்ளது. 1961-ல் நடந்த ஆபரேஷன் சட்னி-யில் இந்திய கடற்படைக்கு சாட்சியாக நின்ற அஞ்சதீப் தீவின் பெயரை இந்த கப்பல் தாங்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்க்கும் 19 நாடுகள்!! கடல் ராசா இனிநாம தான்! கடலோர பாதுகாப்பில் ராஜ்நாத்சிங் போடும் ப்ளான்!
#WATCH | Tamil Nadu | Navy chief Admiral Dinesh K Tripathi commissioned INS Anjadip at Chennai Port. (27.02) pic.twitter.com/ySrngBO8N1
— ANI (@ANI) February 28, 2026
அட்மிரல் தினேஷ்குமார் மேலும் கூறியதாவது: "இந்திய கடற்படை வேகமாகவும் தெளிவான அணுகுமுறையுடனும் நவீன கப்பல் படையை வடிவமைத்து வருகிறது. கடந்தாண்டு 12 போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் சேர்க்கப்பட்டன. இந்த ஆண்டு 15 போர்க்கப்பல்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களை அதிகரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் INS அஞ்சதீப் இன்று கடற்படையில் இணைந்துள்ளது."
மிக முக்கிய அறிவிப்பாக, "வரும் 2035-க்குள் 200-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் ஒன்றாக இந்திய கடற்படையை மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்" என்று தெரிவித்தார். தற்போது 50 கப்பல்கள் இந்திய கப்பல் தளங்களிலேயே கட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கடற்படை உயரதிகாரிகள், தமிழக அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். INS அஞ்சதீப் எதிரி நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறனுடைய அதிநவீன கப்பலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையின் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.
இந்திய கடற்படை விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், 2035 இலக்கு உலக அளவில் இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது... கலங்காத நண்பா.. விஜய்க்கு தாடி பாலாஜி ஆதரவு..!!