கடலையே கன்ட்ரோலில் எடுத்த இந்தியா... ஓடி ஒளிய முடியாமல் துடிக்கும் பாகிஸ்தான்...!
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில், அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பெண்களின் கண் முன்னே அவர்களின் கணவர்களை சுட்டுக் கொன்றனர். இதில் 26 பேர் பலியாயினர்.பெண்களின் கண்ணெதிரிலேயே கணவன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்துார் என்ற ராணுவ நடவடிக்கையை நம் நாடு நேற்று முன்தினம் துவங்கியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் நிர்மூலமாக்கியது. அதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக நேற்று இரவு முதலே பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் ராஜஸ்தான் வரை எல்லையில் இருந்த 15 நகரங்களை குறி வைத்து ட்ரோன், ஏவுகணைகளை அனுப்பி குண்டு வீசியது. அவை நம் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நம் வான் பாதுகாப்பு கவசங்கள் இடைமறித்து அழித்து விட்டன.
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்..! சுக்கு நூறாக்கிய இந்தியா.. திக் திக் நிமிடங்கள்.. விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!
நேற்று பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி முறைமுகத்தின் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் மூலமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஒருபுறம் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்திய கடற்படையினரும் தங்களின் பணிகளை தொடங்கியுள்ளனர். அரபிக்கடலில் போர் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பல இலக்குகளை குறிவைத்து போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அவசரக்கான நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்..! தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த கடிதம்..!